பேதையின் கதை

பேஸ் புக் மூலம் அறிமுகமானான். தினமும் அக்கறை காட்டினான். தனித்திருந்த எனக்கு அவன் கரிசனை இதமாக இருந்தது. தமிழ் மொழியில் பல காலங்களின் பின் உரையாட கிடைத்ததை பாக்கியமாக நான் அவனை கருதினேன். என் பேதை மனது அவனை தினமும் தேடியது. என் ஏக்கத்தை கட்டுப்படுத்த முடியாது தவித்த எனக்கு என் தந்தையின் திடீர் மரணம் அவனை சந்திக்கும் அரிய வாய்ப்பாக அமைந்தது. அப்பாவின் மரணத்தை பேஸ் புக் இல் அவன் பகிர்ந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. வேலை காரணமாக இறுதி கிரிகைககளில் பங்கு பெற முடியாது என்று சொன்னவன், என்னை காண தேடி வந்தான். என் முதல் சந்திப்பில் கேட்டேன் அவன் காதல் வாழ்வை பற்றி. அவன் தன் காதலி தன்னை விட்டு சென்று வேறு திருமணம் முடித்த கதையை கண்ணீருடன் கூறினான்.

அவன் மேல் பரிதாபப்ட்ட நான் அவனுக்கு வாழ்வு கொடுக்க தீர்மானித்தேன்.கட்டி அணைத்தேன். முத்தம் கொடுத்தேன்.நம்பிக்கை நட்த்திரம் ஆனேன். தாலியும் வேண்டாம் நான் உன் பெண்டாட்டி என்று கூறினேன்.அவன் வாழ்வில் சங்கமம் ஆனேன். அவனது பாலியல் வாழ்வு  பற்றி வினவினேன். எதாற்சையாக பள்ளி பருவத்தில் அவன் பாலியலில் ஈடுபட்ட கதைகள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் எனக்கு பள்ளி பருவத்தில் பாலியல் என்றால் என்ன என்று தெரியவில்லை. அவன் நம் நாட்டில் மேல் நாடு மாதிரி பாலியலில் ஈடுபடுவது நம் நாட்டினர் ஒளிவு மறைவாக எவ்வளவு சாதிக்கின்றனர் என்பதை பறை சாட்டியது.

எனது தந்தை  மிகவும் கட்டு பாடான மனிதர்.எனக்கு அவர் எவ் வித சுதந்திரமும் வழங்க இல்லை. அவர் உயிருடன் இருந்த காலத்தில் ஆணுடன் ஆன  நட்புக்கு தடை விதிக்க பட்டது. அப்பா தனது நிறுவனத்தில் வேலை செய்த பெண்ணுடன் உறவு வைத்திருந்த படியால் அப்பாவுக்கு எப்பவும் சந்தேகம்.இதனால் எனக்கு காதலிக்க மிகவும் பயமாயிருந்தது. என் வாழ்வில் முதன் முதலாக என் தாய் நாட்டில் கை கோத்து நடந்தது இவனுடன் தான். அப்பா இறந்து விட்டார் ஆனாலும் என் உள் மனது பயத்தில் செத்தது. அப்பா பார்த்தா பிரச்சனை ஆகும் என சொன்ன என் மனதை. அப்பா உயிருடன் இல்லை என சமாதான படுத்த மிகவும் கஷ்டமாய் இருந்தது. ஒரு நாள் பூராக கொழும்பு நகரில் பப்ளிக்கில் அவனுடன் உலா வந்தது எனக்கு தைரியம் வந்ததை உறுதி படுத்தியது.

மீண்டும் கனடா நாடு திரும்பிய எனக்குள் போராட்ம் எழுந்தது. எவ்வாறு தூர தேச நட்பை பராமரிப்பது ? நேர வித்தியாசம் காரணமாக எவ்வாறு அவ் உறவுக்கு முக்கியம் கொடுக்கிறது? இக் குழப்பம் காரணமாக உறவை முடிவுக்கு கொண்டு வர முயன்றேன். அவன் அழுதான். நீ இன்றி எனக்கு ஒரு வாழ்வு இல்லை என்றான். குருதி வடியும் படங்களை அனுப்பினான். பயந்த நான் அவனுக்கு சம்மதம் தெருவித்தேன். அவன் சந்தோஷமாக வாழணும் என நிணைத்து அவனுக்காக வாழ ஆரம்பித்தேன். அவனுடைய தலையாட்டும் பொம்மையாக மாறினேன். அவன் ஆசைகளை நிறைவேற்றினேன்.

தினமும் நான்  காலையில் எழுந்தவுடன் அவனுடன் பேஸ் சட். வேலை முடிந்ததும் என்னை தேடி வருவான் நெட் கபேக்கு. முதல் முறை இன்ரநெட் மூலம் பாலியலில் ஈடுபட்டது அவனுடன். இன்று இலங்கை நிர்வாண படங்கள் விற்பதில் முன்னோடியாக நிற்பதின் காரணம் ஏன் என நன்கு விளங்குகிறது. பெண்களை பழி சொல்லும் எம் சமுதாயத்துக்கு எவ்வாறு அப் பெண் ஆசை காட்டபட்டு மோசம் செய்ய பட்டாள் என்பது விளங்காது. புத்தி கெட்ட பெண் என்று கூறும் எம் மக்களுக்கு எவ்வாறு அப் பெண் வலு கட்டாயப் படுத்த பட்டாள் என புரியாது. அவள் பிழை என கூறும் நாம் அவள் விடும் கண்ணீரை பார்க்க மறுக்கிறோம். நிர்வானமான பெண் தலை குணிந்து நிற்கிறாள். ஆனால் அவளை நிர்வானத்துக்கு உற் படுத்தினவன் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறான்.

திடீரென ஒரு நாள் பணம் வேண்டும் என்றான். என்னிடம் பணம் இல்லை என்றேன். மனம் வைத்தால் எதுவும் முடியும் என்றான். காதலனுடைய சந்தோஷத்தை நிறை வேற்ற ஏன் இந்த தயக்கம் என்றான்? அவனை சந்தோஷ படுத்த காசு அனுப்பினேன். காசு கிடைத்தது என நன்றி கூறாது மறைந்து போனான். தொடர்பு கொள்ள முடியாது என் பள்ளி தோழியிடம் கூறினேன். அவன் விசாரித்து விட்டு கூறினாள். அவன் திருமணம் முடித்து இரு பிள்ளைகளின் தந்தை என. அதிர்ந்து போனேன். ஏமாற்றறம் என்னை கொன்றது. இவனுக்கா நான் இரங்கினேன் என் மனம் என்னை குற்றம் சாட்டியது. இப்படியும் மனிதர்கள் இவ் உலகில் இருக்கிறார்கள் என்பதை நான் ஏற்க மறுத்தேன்.

என் தோழியின் தேடலின் பின் மீண்டும் தொடர்பு கொண்டான். தான் எதையும் மறைக்கவில்லை. உண்மையை கூற சந்தர்ப்பம் கிடைக்க இல்லை என அழுதான். ஏன் நம்பிக்கை இல்லாது என் நண்பியை தேட விட்டேன் என திட்டினான். தன் குடும்த்தை விட்டு வந்து என்னுடன் வாழ்வான் என உறுதி மொழி அழித்தான். நீ இல்லா எனக்கு வாழ்வு இல்லை என மீண்டும் பொய் சத்தியம் செய்தான். மன்னித்து ஏற்கும் படி மன்றாடினான்.

பொங்கி எழுந்தேன். பெண் குழந்தையை இன்னொரு பெண்ணுக்காக விட்டு வரும் நீ ஒரு மடையன் என்று திட்டினேன். உன் மனைவி உன் மாதிரி உறவில் ஈடுபட்டு அவள் நிர்வானமாக இருப்பது உன் கண்களில் பட்டு நீ திருந்தணும் என சாபம் விட்டேன். மனைவிக்கு துரோகம் செய்பவன் மன்னிக்க பட கூடாது என மன்றாடினேன். அவனை என் வார்த்தைகளால் கொன்றேன்.

பேஸ் புக் இல் அவனுக்கு இருந்தோர் வெளி நாட்டு தமிழ் நண்பிகள். பலர் பதின் வயதினர். அவன் பேஸ் புக் இல் ஷேர் பண்ணுவது சமய விடயங்களும், தத்துவங்களும். நான் காதல் கொண்டது அவன் பேஸ் புக் பேஜை தான். பேஸ் புக்கில் அவன் ஒரு தத்துவ ஞானி ஆக. ஆனால் அவனின் நிஜத்தை பேஸ் புக் மூலம் அறிய முடியவில்லை. அனுபவ ரீதியாக மட்டும் அவன் முக மூடியை கிழித்து,  நிஜத்தை அறிந்தேன்.

நான் மட்டுமா இவ் உலகத்து பேதை பெண்?  பல அறிவாளி பெண்களும் காதல் என்ற பாசத்தினால் பேதைகள் ஆக்கப்படுகின்றனர். பாசத்துக்காக ஏங்குபவர்கள் காதல் என்ற பேரில் ஏமாற்ற படுகின்றனர். திருமண பந்தத்தில் இணைய முடியாதவர்கள் போலி ஆசை வலையில் வீழ்த்தப்படுகின்ர். உறவுக்காக ஏங்குபவர்கள் இலகுவாக நம்பி கெடுகின்றனர். ஆணின்றி நான் இல்லை என்ற பேதை பெண் என்றும் ஒரு பேதையாக வாழ்கிறாள்.

உடல் உறவில் ஈடு பட்ட பெண் தன் கற்பு இழந்து விட்டது என்ற பயத்தின் காரணமாக தொடர்ந்து ஏமாற்ற காரணுக்கு அடிமையாக வாழ்கிறான். ஒரு முறை ஏமாற்றம் அடைந்தவள் ஆண்கள் யாவரும் ஏமாற்றுகாரர் என்ற தப்பான எண்ணத்தில் வாழ்கிறாள். பெண்ணாக பிறந்த நான் ஒரு பேதை என தன்னை இனம் காண்கிறாள். பேதைகளாக நாம் வாழ்வதால் எம்மை இலகுவாக பேதைகள் ஆக்க முடிகிறது.

சமுதாயம் எம்மை ஒதுக்கி வைக்கும் என்ற பயத்தினால் நாம் மௌனமாக இருக்கிறோம். நமக்கு மட்டும் தான் இந்த அநீதி நடந்து உள்ளது என வெட்கத்தில் தலை குணிந்து நிற்கிறோம். உண்மை வெளிச்சத்துக்கு வந்தால் எதிர் காலம் அழிந்துவிடும் என்ற குற்ற உணர்வுடன் வாழ்கிறோம். நாம் செய்தது பிழை என குற்றவாளி கூண்டில் எம்மை நிறுத்தி வைத்துள்ளோம். நாம் நம்மை பேதைகளாக்கி, பேதைகளான ஆண்களை சுதந்திரமாக திரிய விடுகிறோம். நீதி கேட்டு கோட் வாசலில் போராட பேதை பெண் தயங்குகிறாள். பேதையான ஆணின் அடையாளத்தை பொலிஸில் இனம் காண மறுக்கிறாள். தான் பேதையான கதையை கூற வெட்கப்படுகிறாள்.

இன்றைய பேதை பெண் நாளைய மேதை ஆக முடியும். தகர்த்து எறிவோம் எம் பயங்களை. மாற்றி அமைப்போம் எம் வரலாற்றை. துணிந்து எழுவோம் தன்னம்பிக்கையுடன். கை கோர்ப்போம் பேதைகளுடன். உதவி நாடுவோம் மேதைகளிடம் இருந்து. படைப்போம் புது மாற்றத்தை. அமைப்போம் நம்பிக்கையான வாழ்வை. சரித்திரம் படைப்போம் மேதைகளாக.

ஒரு பேதையின் கதை மேதையின் கதையாக மாறட்டும். இன்று என் கதை ஒரு மேதையின் கதை. உங்கள் கதைகளும் மேதையின் கதையாக சரித்தாதிரம் படைக்க என் வாழ்த்துக்கள்.

Social Share: