மாதவிடாய் காலத்தில் சரியான சுகாதாரத்தைப் பேணுவது உடல் மற்றும் மன நலத்திற்கு மிகவும் அவசியமானது. ஆனால், இந்தக் காலத்தில் சுகாதாரத்தைப் பற்றிய பல தவறான நம்பிக்கைகள் இன்னும் சமூகத்தில் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று, மாதவிடாய் காலத்தில் குளிக்கக் கூடாது என்ற நம்பிக்கையாகும். இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.காய்ச்சல் அல்லது கடுமையான சளி போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனைப்படி குளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், மாதவிடாய் காரணமாக மட்டும் குளிப்பதையோ உடலைச் சுத்தம் செய்வதையோ தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.
தனிப்பட்ட சுகாதாரம்:இந்தக் காலத்தில் சுத்தமான உள்ளாடைகளை அணிவதுடன், அவற்றைத் தேவையான இடைவெளியில் மாற்றுவதையும் வழக்கமாகக் கொள்ள வேண்டும். தினமும் குளிப்பது, தலைமுடியைச் சுத்தமாகப் பராமரிப்பது, பல் துலக்குவது போன்ற அன்றாட சுகாதாரப் பழக்கங்களைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
உங்கள் மாதவிடாய் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக கடையில் வாங்கிய நாப்கினையோ அல்லது வீட்டில் தைத்த துணியையோ பயன்படுத்தினால், அதை குறைந்தது ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை மாற்றவும். நீங்கள் மாதவிடாய் கோப்பையைப் பயன்படுத்தினால், அதை அகற்றி, கழுவி, ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருமுறை மீண்டும் செருகவும். அதை மாற்றும்போது உங்கள் கைகளை நன்கு கழுவ மறக்காதீர்கள். மேலும், பிறப்புறுப்புப் பகுதியை மென்மையாக சுத்தம் செய்து ஈரப்பதமூட்டவும்.
நீங்கள் பயன்படுத்தும் எந்த மாதவிடாய் சுகாதாரப் பொருளாக இருந்தாலும், அது உங்களுக்கு வசதியாக இருந்து, மாதவிடாய் காலத்தை நம்பிக்கையுடனும் சுகாதாரமாகவும் சமாளிக்க உதவ வேண்டும்.
உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு, நீங்கள் பல தயாரிப்புகளை முயற்சி செய்து பார்க்க வேண்டியிருக்கலாம்.
உங்கள் பயன்படுத்தும் மாதவிடாய் சுகாதாரப் பொருளால் அசௌகரியம், வலி அல்லது அசாதாரண அறிகுறிகளை உணர்ந்தால், நீங்கள் வேறு ஒரு தயாரிப்பை முயற்சி செய்யலாம்.
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மற்றொரு தயாரிப்பிற்கு மாறலாம்.
வாசிக்கவும்…