மாதவிடாய் காலத்தில் குளிக்கலாமா?

மாதவிடாய் காலத்தில் குளிப்பதால் நோய் வரும் என்று பல பெண்கள் நம்புகிறார்கள். குழந்தை பருவத்திலிருந்தே மாதவிடாய் காலத்தில் குளிக்காத பெண்களும் சிறுமிகளும் நம்மிடையே உள்ளனர்.

மாதவிடாய் காலத்தில் குளிப்பதால் நோய் வரும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இது பள்ளியின் 7 ஆம் வகுப்பு சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடப்புத்தகத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு மூலம் இதுபோன்ற கட்டுக்கதைகளை நாம் அகற்றலாம். இப்பாகமுவ பதலகொட ஏரிப் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் 4 வருட விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குப் பிறகு, இப்போது பலர் தங்கள் மாதவிடாய் காலத்தில் குளிப்பதைத் தவிர்ப்பதில்லை.

“குளிக்கவே பயமா இருந்தது”. எவ்வளவு வியர்த்தாலும், நான் குளிக்கவே மாட்டேன். சளி பிடித்தால் ஏதாவது ஆகிவிடுமோன்னு பயமா இருக்கு. உண்மை தெரிஞ்ச பிறகு, என் பயம் போயிடுச்சு. இப்போ நான் தினமும் குளிக்கிறேன். அந்தக் கோப்பையை வச்சுக்கிட்டு, ஏரியில் கூட மூழ்கி குளிக்க முடியும்.

 

Social Share: