மாதவிடாய் காலத்தில் சரியான சுகாதாரத்தைப் பேணுவது நமது உடல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது. இது தொடர்பாக கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விடயங்கள் கீழே உள்ளன.
தனிப்பட்ட சுகாதாரம்: உங்கள் மாதவிடாய் காலத்தில் வழக்கமான தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பது அவசியம். இதில் உங்கள் மாதவிடாய் தயாரிப்புகளை தவறாமல் மாற்றுவது (பொதுவாக ஒவ்வொரு 4-6 மணி நேரத்திற்கும்), மாதவிடாய் தயாரிப்புகளை கையாளுவதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை கழுவுதல் மற்றும் உங்கள் பிறப்புறுப்பு பகுதியை லேசான சவர்காரம் மற்றும் தண்ணீரில் மெதுவாக சுத்தம் செய்தல் ஆகியவை அடங்கும். உங்கள் மாதவிடாய் தயாரிப்பை எத்தனை மணி நேரம் அணியலாம் என்பது தயாரிப்பின் வகை, உங்கள் மாதவிடாய் இரத்தத்தின் அளவு, உங்கள் மாதவிடாய் நாள் போன்றவற்றைப் பொறுத்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் மாதவிடாய் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு கடையில் வாங்கிய பேட் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட துணியைப் பயன்படுத்தினால், குறைந்தபட்சம் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் அதை மாற்றவும். நீங்கள் மாதவிடாய் கோப்பையைப் பயன்படுத்தினால், அதை அகற்றி, கழுவி, ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் மீண்டும் செருகவும். அவற்றை மாற்றும்போது உங்கள் கைகளை நன்கு கழுவ மறக்காதீர்கள். மேலும் யோனி பகுதியை மெதுவாக சுத்தம் செய்து ஈரப்பதமாக்குங்கள்.
வாசிக்கவும்… கழுவி மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி மற்றும் தயாரிப்புகள்