மே மாதம் 8ஆம் திகதி, 2018 அவள் காதலித்தாள் அவன் உறவு பையனை. 50 வருடங்களின் முன் காதல் மௌனமானது. விழிகள் மட்டும் சந்தித்து பேசும் காதல் அது. உறவுகளின் முன்னிலையில் தொலைவில் நின்று பரிமாறும் காதல் காலம் அது. தன் காதலனை பெயர் சொல்லி அழைக்க முடியாது மனதில் ஆசைகளை வளர்த்து அவற்றுடன் கனவில் வாழும் காலம் அது. காதல் உணர்வுகளை மன அறையில் பூட்டி மண அறைக்காக காத்திருக்கும் காதல் அது. பலரது காதல் ஒரு தலை காதலாக மறைந்தது சரித்திரம். சிலரது காதல் பெற்றோர் ஆசிர்வாதத்துடன் மண மேடையில் ஆரம்பித்தது. ஒரு சிலருக்கு மட்டும் தாம் விரும்பிய வாழ்வை தாம் அமைக்கும் துணிவு இருந்தது. இவளோ பெற்றோர் தான் கண் கண்ட தெய்வம் என அவர்கள் ஆணை படி வாழ்ந்த பெண் இவள். தன் பெற்றோர் தான் விரும்பிய விதம் ஒரு வாழ்வை தருவார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தாள்.
அவள் வீட்டின் கடைசி பிள்ளை. செல்ல பிள்ளை. அழகான தோற்றமுடையவள். விதம் விதமான ஆடை அணிகலன்கள் அணிபவள். என்றும் அவளது பண்பான குணமும், அழகிய தோற்றமும் யாவரையும் அவளிடம் ஈர்க்கும். மிகவும் பிரமாதமான சமயல் செய்பவள். கருணை குணம் கொண்டவள். இவள் ஒரு செல்ல சீமாட்டி தான். அவள் தனது காதலனை மணம் முடிக்க காத்திருந்தவேளையில் திடிரென அவள் திருமணம் வேறு ஒரு நபருடன் நடந்து முடிந்தது. அவளுக்கு அவள் கணவன் மீது ஆத்திரம். தன் வாழ்வை தன் கணவன் அழித்து விட்டான் என்ற தப்பான எண்ணத்தால் கணவனை எரிச்சல் ஊட்டினாள். காரணமின்றி சண்டை பிடித்தாள். குழறி அழுதால். விரக்தி அடைந்த அவள் கணவன் அவளை பிரிந்து சென்றான். வாழா வெட்டியாக அவளை ஏற்க முடியாத அவள் குடும்பம் அவளை அவள் கணவனிடம் அனுப்பி வைத்தது. ஏற்க முடியாது என்று மறுத்த கணவனிடம் கெஞ்சி ஒரு குழந்தைக்கு தாய் ஆனாள். குழந்தையை வயிற்றில் சுமந்தவள் பிரசவம் என்ற காரணத்துக்காக தாய் வீடு அடைந்தாள். பிரசவ வலியை விட தன் வாழ்வை அழித்தவன் குழந்தையை தன் வயிற்றில் சுமப்பது சுமையாக இருந்தது. தன் கணவன் மீது காட்ட வேண்டிய கோபத்தை குழந்தை மீது காட்டினாள். தன் வாழ்வு இழந்த காரணத்துக்காக தான் பெற்ற தன் எதிரியின் குழந்தையை வெறுத்தாள்.
தனக்கு கிடைத்த தண்டனையை நிவிர்த்தி செய்ய தன் குழந்தையை கவனியாது தண்டித்தாள். கணவனை பிரிந்து தனி தாயாக மன ரீதியில் ஏற்பட்ட வலியை குழந்தை மீது காட்டினாள். அவள் ஒரு தாய் என்பதை மறந்து குழந்தைக்கு போட்டியாக வாழ்ந்தாள். நீ உன் தகப்பன் போல் என கூறி குழந்தையை ஒதுக்கினாள். குழந்தையுடன் சண்டை பிடித்தாள். குழந்தை முன் அழுது குழந்தையின் தன்னம்பிக்கையை உடைத்தாள். அவள் மன நிலை குழந்தையை போன்று இருந்து. இன்றும் அவள் ஒரு வயோதிப குழந்தை தான். சமுதாயத்துக்காக மீண்டும் கணவனும், மனைவியும் ஒன்று சேர்ந்தனர். தற்கொலை முயற்சி செய்து கணவனை மிரட்டினாள். வீடு என்பது அவளுக்கு கோபத்தை கொடுத்தது. எனவே கோயிலில் அவள் சரணடைந்தாள். கணவன் பிரிந்து வாழ்ந்த போது அவருக்கு வேறு தொடர்பு இருந்தது அறிந்ததும், வீட்டில் சமையாது தன் கோபத்தை வெளி காட்டினாள். கணவனை பழி வாங்க நினைத்தவள் பிள்ளைகளையும் தெரியா தனமாக பழி வாங்கினாள். ஆலயத்தில் அவளது உண்மையான கருணை குணமும், வீட்டில் விரக்தியில் வாழ்வை அழிக்கும் அரக்கியாகவும் வாழ்ந்தாள்.
அயலோர் அவள் அன்பையும், அவள் பெற்ற குழந்தைகள் அவளின் கோபத்தையும் அனுபவித்தனர். கோயிலில் தெய்வமாக விளங்கிய அவள் விட்டில் காளியாக அனைவரது மகிழ்ச்சியையும் அழித்தாள். தான் விரும்பிய விதம் தன் வாழ்வு அமையாத காரணத்தால், மற்றவர்கள் வாழ்வை தான் நினைத்த படி அமைக்க முற்பட்டாள். தன் வாழ்வுக்கு குரல் கொடுக்க முடியாதவள் மற்றவர்களுக்காக குரல் கொடுத்தால். சமுதாயத்துக்கு பயந்து கணவனுடன் வாழ்ந்த அவள் வீட்டினுள் உறவு இன்றி வாழ்ந்தாள். தன் வாழ்வு சபிக்க பட்டதால் மற்ற வர்களை சபிக்க பயப்படவில்லை. தான் பட்ட வேதனையை மற்றவர்களும் பட வேண்டும் என ஆசை பட்டாள். அவளது தொலைந்த காதலன் பற்றிய உண்மை மறைக்க பட்டதால் அவளும் உண்மைகளை மறைத்து போலி வேடம் போடுகிறாள். தனக்கு கிடைத்த அநியாயம் மற்றவர்கள் அனுபவித்து தன் கஷ்டத்தை உணர வேண்டும் என ஏங்குகிறாள். காதலனுக்கு என்ன நடந்தது என்பது அவள் பெற்ற மகள் அவள் காதலனை சந்திக்கும் வரை அவளுக்கு தெரியவில்லை. அவள் கணவனுடன் 36 வருடங்கள் வாழ்ந்த பின் தான் அவளுக்கு உண்மை புரிந்து. அவன் காதனுக்கு நல்ல வருமானம் இல்லாததால் அவள் அண்ணன் அவளை மிகவும் படித்த, அதி உயர் வருமானம் கொண்ட தன் நண்பனுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார். பணத்துக்காக அவள் குடும்பத்தினர் அவள் வாழ்வை அழித்துள்ள்னர். அவள் கணவன் இறக்கும் வரை அவள் தன் காதலை புதைத்து வைத்தாள்.
அன்று அவள் வாழ்வு அவள் குடும்பத்தால் அழிக்கப்பட்டது. ஆனால் தன் வாழ்வை அழித்தவர்களை எதிர் நோக்க துணிவு இல்லை. எனவே தன் ஆத்திரத்தை தன் குழந்தைகளிடம் காட்ட அவளால் முடிகிறது. தன் குடும்பம் தன் வாழ்வை அழித்து விட்டது என கூற தயங்கும் அவள் என்றும் சிரித்த படி ஒரு குறையும் இல்லை என போலியான வாழ்வை வாழ்கிறாள். தப்பு என் குடும்பம் மீது என உண்மையை கூற பயப்படும் அவள் மற்றவர்களை குற்றம் சாட்டி உண்மையை மறக்கிறாள். தன் சோக கதையை நினைத்து வெட்கம் அடையும் அவள் மற்றவர்கள் கதைகளை கூறி அவர்களை தலை குணிய வைக்கிறாள். அவள் தன் நிஜத்தை மறைக்க தன்னை இழந்து சுய நினைவு இன்றி வாழ்கிறாள். அவள் அன்று அனுபவித்த சோகத்தை இன்றும் சுமந்து செல்கிறாள். அவள் கடந்த காலத்தை ஏற்க அவளுக்கு துணிவு இல்லை. என் வாழ்வை அழித்தவர்கள் மீண்டும் அழிப்பார்கள் என்ற பயத்துடன் அவர்கள் இறந்த பின்பும் தன்னை தான் அழித்து கொண்டிருக்கிறாள். தனக்கு ஒரு காதலன் திருமணத்துக்கு முன் இருந்தார் என்ற உண்மை தெரிந்தால் சமுதாயம் ஒதுக்கிவிடும் என்று கணவன் இறந்த பின்பும் பயத்துடன் வாழ்கிறாள். அன்றைய சோகம் இன்று பயம், வெட்கம், ஆத்திரம், அவமானம், மன சோர்வு என சோகமாக தொடர்கிறது. மனதில் அவள் தன் எதிர்காலத்தை தொலைத்த பெண்ணாக தான் வாழ்கிறாள்.
தொலைந்த காதலனுடன் தன்னையும் தொலைத்தவளாக இன்றும் வாழ்கிறாள். காலம் மாறி விட்டது ஆனால் அவள் மாறவில்லை. கடந்த காலத்தை அவள் மறந்து வாழ்ந்தாலும் அவ் நினைவுகள் அவளை ஞாபகப்படுத்தி அழித்து கொண்டிருக்கின்றன. தன் கணவன் குழந்தைகள் நினைத்து பெருமை பட வேண்டிய அவள் இழந்த காதலனுக்காக கவலை படுகிறாள். தன் வாழ்வின் கவலைக்கு மற்றவர்கள் தான் காரணம் என அடுத்தவர்கள் மீது பழி செலுத்துகிறாள். தன் வாழ்வுக்கு அடுத்தவர்கள் தான் பொறுப்பாளிகள் என இன்றும் அடுத்தவர்களை தங்கி வாழ்கிறாள். அன்று அவள் தான் விரும்பிய வாழ்வை தேர்ந்தெடுக்க பயந்ததால் இன்றும் அவள் தீர்மானங்கள் எடுக்க தயங்குகிறாள். அன்று அவள் தன் விருப்பத்தை தெருவிக்க மறுத்ததால் இன்றும் அவள் மௌனமாக வாழ்கிறாள். இன்று தன் வாழ்வை மகிழ்ச்சியாக அமைக்கும் பொறுப்பை ஏற்காது கடந்த காலத்துக்கு அடிமையாக வாழ்கிறாள். கல்யாணம் சிலருக்கு சுகத்தையும் பலருக்கு சுமையாகவும் அமைகிறது. தாம் விரும்பிய வாழ்வை அமையாவிட்டால் வெறுப்புடன் தோற்று போனவர்களாக வாழ்கின்றனர். திருமண வாழ்வு கசப்பாக அமைந்ததால் முழு வாழ்வையும் இழந்து வாழ்வார்கள். இவள் போன்று பல பெண்கள் காதலுடன் தம் வாழ்வையும் இழந்து சமுதாயத்துக்காக ஒரு போலியான வாழ்வை வாழ்கிறாள். பெற்றோரை திருப்தி படுத்த திருமணம் செய்கின்றனர். சமுதாய அந்தஸ்துக்காக குழந்தை பெறுகின்றனர். ஆனால் மனதிலொ ஏமாற்ற பட்டவர்களாக, ஏமாறினவளாக, வெறுப்புடன் வாழ்ந்து தன் வெறுப்பை தன் குழந்தைக்குள் விதைக்கிறாள்.
அவள் குழந்தைகளும் தாய் பாசத்துக்கு பதிலாக விரக்தியை அனுபவிக்கின்றனர். குடும்பம் சிலருக்கு துன்பத்தின் இல்லமாக அமைகிறது. சிலருக்கு குடும்பம் வேதனையாக அமைகிறது. பலர் குடும்ப வேதனைகளை மனதில் புதைத்து வாழ்கின்றனர். பலரது குடும்ப வாழ்வு இரகசியமாக பேண படுகின்றன. தமக்கு மட்டும் நல்ல குடும்பம் அமையவில்லை என வேதனை படுகின்றனர். அவள் போன்று பலர் குடும்பத்தால் கைவிடபட்டு குடும்பத்தை இழந்து குடும்பம் என்ற போலியான உறவில் சமுதாயத்துக்காக வாழ்கின்றனர். குடும்பம் எனக்கு இல்லை என்று தைரியமாக கூறும் பெண்களுக்கும், கட்டாய கல்யாணத்தில் இருந்து வெளி வந்து வாழும் வீர பெண்களுக்கும், தான் விரும்பிய வாழ்வை அமைக்கும் சுதந்திர பெண்களுக்கும் என்றும் என் வாழ்த்துக்கள்.