நிர்வாண புகைப்படங்கள் – ஏன் அனுப்புகிறோம்?

நிர்வாண படங்கள் என்பன தனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்களை குறிக்கும்.  இவ்வாறான படங்கள் அல்லது வீடியோக்கள் நெருக்கமான/காதல் உறவுகளில் உள்ளோருக்கிடையே அதிகளவில் பகிரப்படுகின்றன. மேலும், இந்த நிர்வாண படங்கள் அதிகளவில் ‘செல்பி’ முறையில் எடுக்கப்படுகின்றன.

இன்றைய காலத்தில், காதல் உறவில் உள்ள இருவர் தம்மடையே இந்த படங்களை பரிமாறுவது ஒரு கலாச்சாரமாக மாரி உள்ளது. இந்த படங்கள் மூன்றாம் நபர்களுக்கு செல்வதால் பாரிய பிரச்சனைகள் உருவாகுவதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். இதை பற்றி நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் கதைப்பது முக்கியமாகும். கண்டிப்பாக இதை பற்றி கதைப்பது இலகுவாக இருக்காது. இருப்பினும் நீங்கள் இந்த நிலமையை பிள்ளைக்கு விளக்கப்படுத்தாது சந்தர்ப்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை பற்றி கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். எனவே, கூச்சப்படாமல் பிள்ளையை நலனை எண்ணி இதை பற்றி அவர்களுடன் பேசுங்கள். நீங்கள் கலந்துரையாட வேண்டிய முதல் விடயம் இந்த படங்கள் இரு மாணவர்கள் இடையே மற்றும் காதலர்களுக்கு இடையே அனுப்பப்படுவதற்கான பின்வரும் காரணங்களை ஆகும்.

இந்த படங்கள் காதலர்களுக்கு இடையில் அதிகளவில் பகிரப்படுவதற்கான காரணங்கள் ‘காதல்’ மற்றும் ‘நம்பிக்கை’ ஆகும். இந்த படங்களை தன் காதலிக்கும் நபருக்கு அனுப்புவது அந்நபர் மீது வைத்துள்ள காதலை மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு முறை என பல இளைஞர்கள் நம்புகின்றனர். மேலும், இவ்வாறு நிர்வாண படங்களை பகிருவது தன் உறவில் உள்ள ஒரு மைல்கல்லை கடக்க உதவும் எனவும் இவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

தமது பாலியல் தேவைகள், கவர்ச்சி மற்றும் விரக்தி போன்றவற்றை வெளிப்படுத்தவும் இந்த படங்கள் பகிரப்படுகின்றன. மேலும், காதலர்கள் வெவ்வேறு ஊர்களில் வசித்தால் அல்லது நேரில் கண்டு பாலியல் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் இல்லாதவிடத்து, இவ்வாறான படங்களை பகிருகிறார்கள். இந்த படங்களை தான் காதலிப்பவருடன் பகிருவது மூலம் தம் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

சில சமயங்களில், ஆரோக்கியமற்ற காதல் உறவுகள் காரணமாக இந்த படங்கள் பகிரப்படலாம். உதாரணத்திற்கு, நிர்வாண படங்களை பகிராவிட்டால் உன்னுடன் உள்ள உறவை முறித்து கொள்வேன் என கூறுவதால், சிலர் இந்த படங்களை விருப்பமில்லாமல் அனுப்பக்கூடும். மேலும், தன் காதலன் வேறு ஒருவருடன் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய போக கூடும் எனும் பயத்திலும் இந்த படங்களை பகிரலாம்.

சிலர் தாம் இந்த நபரை தானே எதிர்காலத்தில் திருமணம் செய்ய போகிறோம் எனும் கண்மூடித்தனமான நம்பிக்கையிலும் இந்த படங்களை அனுப்புவது உண்டு.

மேலும், சிலர் பண தேவைகளுக்காக அல்லது வறுமை காரணமாக, நேரடியாக இந்த படங்களை இணையத்தில் விற்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

இந்த படங்கள் கட்டிளமை பருவத்தினர் இடையே காதல் உறவுகளில் இருக்கும் ஜோடிகளுக்கு இடையே அனுப்படுவதற்கான ஒரு முக்கிய காரணம் இந்த செயலின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் இருப்பதாகும். இணையம், சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட் தொலைபேசிகளை பற்றி உள்ள அறியாமை சில சமயங்களில் பிள்ளைகளை இவ்வாறு செய்ய தூண்டலாம். இதனால் தான் இந்த விடயங்களை பற்றி பிள்ளைகளும் முன் கூட்டியே கதைப்பது மிக முக்கியம்.

v அருந்ததி வல்லவராயன் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார். இவர் கட்டுரைகள் எழுதுவில் மற்றும் சமூக சேவையில் ஆவல் கொண்ட ஒரு இளம் யுவதி. இவர் சிறுவர் பாதுகாப்பு, பால்நிலை வன்முறை ஒழிப்பு பற்றி பாலியல் நாட்டம் போன்ற தலைப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது.

Social Share: