சமூக ஊடகங்களை பற்றி பிள்ளைகளுடன் பேசுவோம்

சமூக ஊடகங்கள் என்பன “சமூகத்துடன் தொடர்பு கொள்ள, உறவுகளை மேற்கொள்ள மற்றும் தகவல்களை பரவ பயன்படும் இணையதளங்கள் மற்றும் ஊடகங்கள்” ஆகும். சமூக ஊடகங்களை நாம் பொதுவாக சோஷல் மீடியா என அழைப்பது உண்டு. இன்று வயது, நகரம் பார்காமல் இலங்கையில் எந்த ஒரு மூலையில் உள்ள ஒரு நபரும் சமூக ஊடகங்களை பாவிக்கக்கூடிய நிலமை உள்ளது. சமூக ஊடகங்கள் பல பயன்களை அளித்தாலும் சில சமயங்களில் இவற்றை தவறான முறையில் உபயோகிக்கும் பொழுது சில சிக்கல்கள் உருவாகின்றன. இந்த வகையில் இவற்றின் பாவனையை பற்றி பிள்ளைகளுடன் முன்கூட்டியே கலந்துரையாடுவது முக்கியாகும். உங்கள் பிள்ளைகள் சம்மோக ஊடகங்களை பாவிக்கின்றனரோ இல்லையோ, பின்வருவனவற்றை பற்றி அவர்களுடன் கதைப்பது சிறந்ததாகும்.

பொதுவான சமூக ஊடகங்கள்

  • பேஸ்புக் – இது இணையத்தில் உள்ள மிகப்பெரிய சமூக ஊடகமாகும். 14 வருடங்களாக பாவிக்கப்படும் இந்த ஊடகம், தற்போது 1.59 மில்லியனுக்கும் அதிகமானோரால் பாவிக்கப்படுகிறது.
  • ட்விட்டர் – செய்திகளை உடனுக்கூடனே பரிமாற பயன்படும் ஒரு சமூக ஊடகம். இந்த ஊடகத்தில் குறுகிய செய்திகளை (280 எழுத்துகளுக்கு குறைபட்ட) மட்டுமே பரிமாற முடியும்.
  • லிங்கிட் இன் – இது வியாபாரிகள் மற்றும் வேலை செய்யும் நபர்களுக்கான சமூக ஊடகமாகும். தமது வேலை வாய்ப்புகளை விருத்தி செய்ய விரும்பும் எந்தவொரு நபரும் இந்த ஊடகத்தை பாவிக்க வேண்டும். உங்கள் கல்வி தகமைகள், வேலை அனுபவம் மற்றும் திறமைகள் போன்றவற்றை இதில் பகிருவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு ஏற்ற வேலைகளை கண்டுபிடிக்கலாம்.
  • இன்ஸ்டாகிராம் – புகைப்படங்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த சமூக ஊடகமாக இது கருதப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் படங்களையும் சிறிய வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
  • யூ டியூப் – வீடியோக்கள் பார்க்க மற்றும் பாட்டு கேட்க என பல பொழுதுபோக்கு தேவைகளுக்கு இது பயன்படுகிறது. இதில் நீங்கள் வீடியோக்கள் பார்ப்பது மட்டும் இன்றி, பகிரவும் முடியும்.
  • வாட்சப் – குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள தற்போது அதிகமாக பயன்படும் சமூக ஊடகம் இதுவாகும். தனி நபர்களுக்கு அல்லது குழுக்களுக்கு உங்களால் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோ/ஆடியோ போன்றவற்றை பகிர முடியும்.
  • ஸ்னாப் சட் – இந்த ஊடகம் உடனுக்கூடனே தகவல் பரிமாற்ற பயன்படும். இந்த ஊடகத்தின் சிறப்பம்சம் யாதெனில், படங்களை பகிர்ந்து கொண்ட சில நொடிகளில் அது தானாகவே  காணாமற் போய்  விடும்.
  • பிலிக்கர் – உங்கள் புகைப்பட திறன்களை வெளிக்காட்டவும், போட்டோ ஆல்பங்களை இணையத்தில் உருவாக்கவும் இதுவே சிறந்த இடமாகும்.
  • வைபர் – இலவசமான தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள, குறுஞ்செய்திகள் அனுப்ப மற்றும் வீடியோக்கள்/படங்கள் பகிர இது பயன்படும். இதனை கையடக்க தொலைபேசி மற்றும் கணனி என இரண்டிலும் பாவிக்கலாம்.
  • இமோ – ஐ.எம்.ஓ குறுஞ்செய்தி மற்றும் வீடியோ  செய்திகளை பகிர பயன்படும். இந்த செய்திகளை நீங்கள் ஒரு நபருடனோ அல்லது குழுக்களுடனோ பகிர்ந்து கொள்ளலாம்.

இலங்கையில் சமூக ஊடகங்களின் தற்போதைய பயன்பாடு

சேர்ட் நிறுவனத்தின் தரவுகளுக்கு அணுக, இலங்கையில் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக ஊடகம் பேஸ்புக் ஆகும். இலங்கையில் இணையத்தை பாவிப்போரில் 50% மேலானவர்கள், அதாவது கிட்டத்தட்ட 4.2 மில்லியன் நபர்கள் இந்த சமூக ஊடகத்தில் உள்ளனர்.

பேஸ்புக்  தவிர, பின்டெரெஸ்ட், யூ டியூப்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் லிங்கிட் இன்  போன்ற இலங்கையில் அதிகமான பாவிக்கப்படுகின்றன.

சமூக ஊடகங்ளின் பயன்கள்

சமூக ஊடகங்கள் நாம் உரையாடும் முறைகளை முற்றிலும் மாற்றிவிட்டன. இது மட்டும் இல்லாமல், நாம் வியாபாரம் செய்யும் முறைகள், தினசரி கடமைகளை செய்யும் முறைகள் போன்றனவும் சமூக ஊடகங்களால் மாற்றமடைந்து உள்ளன. பின்வரும் முறைகள் மூலம் நாம் இந்த சமூக ஊடகங்களை பயனுள்ள முறையில் பாவிக்கலாம்.

  • சர்வதேச தொடர்புகள் –  சமூக ஊடகங்களின் மூலம் எம்மால் உலகில் எந்த மூலையில் உள்ள ஒரு நபரையும் நாம் இலகுவாக தொடர்பு கொள்ள முடியும். உங்கள் ஊரில் இருந்து வெளியூர் சென்ற நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடன் உங்களால் தொடர்ந்து உரையாட முடியும்.
  • உடனடி தொடர்பாடல் – இந்த சமூக ஊடகங்கள் மூலம் நீங்கள் எங்கு இருந்தாலும் எந்த நேரத்திலும், தகவல்களை இலகுவாக பரிமாற முடியும்.
  • புதிய செய்திகள் – உலகத்தில்தற்போது என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள நீங்கள் விரும்பினால், நீங்கள் சமூக ஊடகமொன்றுக்கு சென்றால் போதும். நீங்கள் எந்த விடயங்களில் ஆர்வம் கொண்டு உள்ளீர்களா,  அவற்றை சமூக ஊடகங்களில் பின்தொடர்வது மூலம் அங்கு ஏற்படும் புதிய விருத்திகள் மற்றும் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
  • வியாபார வாய்ப்புகள் – வியாபாரிகளும் நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்களுடன் தொடர்பாட சிறந்து இடம் இதுவாகும். உங்கள் உற்பத்திகளை விளம்பரப்படுத்துவும் இவை உதவும்.
  • பொழுதுபோக்கு – தமக்கு ஒரு இடைவேளை கிடைக்கும் பொழுது அல்லது ஒய்வு நேரத்தின் பொழுது பலர் சமூக ஊடகங்களை பாவிப்பது உண்டு. எமக்கு நேரம் உள்ள வேளையில் எம் சமூகத்துடன் கலந்துரையாட இது ஒரு சிறந்த  முறையாகும்.
v அருந்ததி வல்லவராயன் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார். இவர் கட்டுரைகள் எழுதுவில் மற்றும் சமூக சேவையில் ஆவல் கொண்ட ஒரு இளம் யுவதி. இவர் சிறுவர் பாதுகாப்பு, பால்நிலை வன்முறை ஒழிப்பு பற்றி பாலியல் நாட்டம் போன்ற தலைப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது.

 

vc

Social Share: