இணையம் என்பது இன்று எம் வாழ்வின் ஒரு அத்தியாவசிய பங்காக மாற்றி உள்ளது. எம்மை விட இதனை அதிகமாக பயன்படுத்துவது எம் பிள்ளைகள் தான். இணையத்தின் மூலம் நாம் பல பயன்களை பெறலாம். இருப்பினும் சில சமயங்களில் துரதிஷ்டவசமாக இதனால் பிரச்சனைகளும் உருவாக முடியும். இதனை தவிர்ப்பதற்கான ஒரு முக்கிய வழிய எம் பிள்ளைகளுடன் இந்த விடயத்தை பற்றி வெளிப்படையாக கலந்துரையாடல் ஆகும். இந்த வகையில், உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்கக்கூடிய சில விடயங்கள் பின்வருமாறு.
வரலாறு
இணையம் என்பது “வேறுபட்ட தகவல்களை மற்றும் தொடர்பாடல் வசதிகளை வழங்கக்கூடிய ஒரு உலகளாவிய கணினி வலையமைப்பு” ஆகும். இணையத்தின் வரலாறு 1950களில் இலத்திரனியல் கணினிகளின் உருவாக்கத்தோடு தொடங்கியது. இவ்வாறான ஒரு உலகளாவிய வலையமைப்பை உருவாக்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் முயன்றன.
1980களில் சுவிற்சர்லாந்து நாட்டில் சி.ஈ.ஆர்.என் எனும் நிறுவனத்தின் டிம் பெர்னெர்ஸ்-லீ எனும் கணினி அறிவியலாளரால் வேர்ல்ட் வைட் வெப் கண்டுபிடிக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டுகளில் இருந்து இணையம் எம் கலாச்சாரம், வணிகம் மற்றும் தொழிநுட்பம் போன்ற துறைகளை மாற்றி அமைத்துள்ளது. சமூக ஊடகங்கள், இணைய வணிகத்தளங்கள், வீடியோ கோல்கள் போன்றன இவற்றுக்கான சிறந்து உதாரணங்களாகும்.
இலங்கையில் தற்போதைய மற்றும் எதிர்கால இணைய பாவனை
இலங்கை டெலிகாமிற்கு அணுக, இலங்கையில் கையடக்க இணைய பாவனை கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. கையடக்க தொலைபேசிகள் மூலம் இணையத்தை பாவிப்போரின் எண்ணிக்கை 2012-2017 ஆண்டுகளுக்கு இடையில் 8% இல் இருந்து 21% இற்கு அதிகரித்து உள்ளது. இருப்பினும், மற்றைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் எம் நாட்டின் கையடக்க இணைய பாவனை இன்னும் ஆரம்ப வளர்ச்சி கட்டங்களிலேயே உள்ளது.
இந்த கையடக்க இணைய பாவனையின் வளர்ச்சி காரணமாக நிலையான இணைய பாவனை குறைவடைந்து வருகிறது. இருப்பினும் அடுத்த ஐந்து வருடங்களில் இந்த கையடக்க இணைய பாவனை அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது.
இணையத்தின் பயன்கள்
இணையம் என்பது ஒரு சிறந்த மற்றும் பயனுள்ள கண்டுபிடிப்பாகும். இணையத்தின் மூலம் நாம் எல்லையற்ற தகவல்களை மற்றும் பொழுதுபோக்குகளை பெற்றுக்கொள்ள முடியும். பின்வருவன இணையத்தின் மூலம் நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய சில பயன்கள் ஆகும்.
- தகவல் பெற்றுக்கொள்ளல் – கூகுள் மற்றும் யாகூ போன்ற இணையதளங்களை பாவிப்பது மூலம் உங்களுக்கு வேண்டிய எந்தவொரு தகவலையும் பெற்றுக்கொள்ளலாம்.
- சேவைகள் – இணைய வணிக சேவைகள், மருத்துவ சேவைகள் போன்ற பல சேவைகளை நீங்கள் இங்கு பெற்று கொள்ளலாம். உதாரணத்திற்கு, இன்று அதிகமானோர் இணையத்தை ஷாப்பிங் செய்வதற்கு பயன்படுத்துவது உண்டு.
- பொழுதுபோக்கு – கேம்கள் விளையாட, பாட்டு கேட்க, படம் பார்க்க என பல பொழுதுபோக்கு விடயங்களுக்கு இணையத்தை பயன்படுத்தலாம்.
- சமூக ஊடகங்கள் – இன்று அதிகமானோர் புதிய நண்பர்களை சந்திக்க இணையத்தை பாவிக்கின்றனர். இணையத்தின் மூலம் புதிய நபர்களை சந்திக்கவும், தற்போதைய நபர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளவும் முடியும்.
- சந்தைப்படுத்தல் – தற்போதைய வியாபாரிகள் அனைவரும் தமது வியாபாரங்களை இணையத்தின் மூலமே சந்தைப்படுத்துகின்றனர். ஒரு வியாபாரத்திற்கான இணையத்தளமொன்றை உருவாக்குவதும் அதனை முழு உலகத்திற்கும் சந்தைப்படுத்துவதும் மிகவும் சுலபமான விடயமாக மாறிவிட்டது.
கல்விக்காக இணையத்தை பயன்படுத்தல்
இணையத்தின் மூலம் எவ்வாறு தொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் பொழுதுபோக்கு என்பன வளர்ச்சி அடைந்து உள்ளனவோ, அவ்வாறே கல்வி துறையும் வளர்ச்சி அடைந்து உள்ளது. நீங்கள் பின்வரும் முறைகளில் இணையத்தை உங்கள் கல்வி தேவைகளுக்காக பயன்படுத்தலாம்.
- இணைய கல்வி – கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல வசதி இல்லாதோர், இணைய கல்வி மூலம் பயனடையலாம். பல கல்லூரிகள் இணைய கல்வி வசதிகளை வழங்கின்றன. மேலும் இந்த வழியில், நீங்கள் வேலைக்கு சென்று கொண்டே கல்வி கற்கவும் முடியும். Allsyllabus போன்ற இணையதளங்கள் மூலம் நீங்கள் எவ்வாறு இணையத்தை கல்விக்காக பாவிக்கலாம் என கற்றுக்கொள்ளலாம்.
- ஆராய்ச்சி – உங்களுக்கு பாடசாலையில் வீட்டு வேலை வழங்கும் பொழுது, நீங்கள் இணையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு படங்களை பற்றி குழப்பங்கள் காணப்பட்டால் அல்லது குறிப்பிட்ட பாட விடயங்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், இணைய ஆராய்ச்சியில் ஈடுபடலாம்.
- இலத்திரனியல் புத்தகங்கள் – இணையத்தின் மூலம் உங்களுக்கு வேண்டிய பாடப்புத்தகங்களை நீங்கள் எந்நேரமும் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள இணைய நூலகங்களை பாவிக்கலாம். Amazon.co.uk போன்ற இணையதளங்கள் மூலம் பழைய புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்.
- கல்வி குழுக்கள் – வேறுபட்ட சமூக ஊடகங்களை பாவிப்பது மூலம் நீங்கள் கல்வி குழுக்களை உருவாக்கலாம். இந்த இணைய குழுக்களில் நீங்கள் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும் பயனுள்ள தகவல்களை ஒருவருடன் ஒருவர் பரிமாறவும் முடியும்.
![]() |
அருந்ததி வல்லவராயன் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார். இவர் கட்டுரைகள் எழுதுவில் மற்றும் சமூக சேவையில் ஆவல் கொண்ட ஒரு இளம் யுவதி. இவர் சிறுவர் பாதுகாப்பு, பால்நிலை வன்முறை ஒழிப்பு பற்றி பாலியல் நாட்டம் போன்ற தலைப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது. |
