இணையத்தினூடாக ஒருவர் கேலிசெய்யப்பட்டாலோ, அச்சுறுத்தப்பட்டாலோ, மிரட்டப்பட்டாலோ, பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்பட்டாலோ அல்லது காட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டாலோ அது இணையத்தினூடான சுரண்டல் மற்றும் வன்முறை (Cyber Exploitation and Violence) என அழைக்கப்படும். இது தனிப்பட்ட புகைப்படங்களை, வீடியோக்களை மற்றும் கேலி படங்கள் மற்றும் தொகுத்து அமைக்கப்பட்ட படங்கள் போன்றவற்றை அனுமதி இல்லாமல் இணையத்தில் பகிர்வதையும் பிரசுரிப்பதையும் உள்ளடக்கும்.
பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஆபாச படங்கள், கேர்ள்பிரென்ட் ஆபாச படங்கள், நிர்வாண படங்களை சேகரித்தல் மற்றும் பகிருதல், நடத்தயை கொண்டு அவமானபடுத்துதல் மற்றும் பாலியல் நோக்கம் கொண்ட குறுந்செய்திகளை அனுப்புதல் போன்றனவும் இணையத்தினூடான சுரண்டல் மற்றும் வன்முறைக்குள் அடங்கும்.
இது இலங்கையில், முக்கியமாக இளம் பிள்ளைகளுக்கு இடையே, ஒரு பாரிய பிரச்சனையாக மாறி உள்ளதால், இதை பற்றி நாம் பிள்ளைகளுடன் கலந்துரையாடவேண்டிய அவசியம் உருவாகி உள்ளது. இந்த வகையில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் உங்கள் பிள்ளைகக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு.
CEV பற்றி சில தரவுகள்
முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டு இருந்தவாறு, இலங்கையில் இணையத்தை பாவிப்போர் முகம் கொடுக்கும் மிகப் பெரிய பிரச்சனை இந்த “சமூக ஊடகங்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள்” ஆகும். சேர்ட் நிறுவனத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகளுக்கு அணுக, இந்த சம்பவங்களின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டில் இருந்து அதிகரித்து வருகிறது.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம், இந்த புகார் எண்ணிக்கை சேர்ட் நிறுவனத்திற்கு மட்டும் செய்யப்பட்டது ஆகும். புகார் செய்யப்படாத மற்றும் வேறு நிறுவனங்களுக்கு புகார் செய்யப்பட்ட சம்பவங்களை கணக்கில் எடுத்தால், மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாகும்.
2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சமூக ஊடகங்கள் தொடர்பான சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமாயின், இதில் அநேகமானவை சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்ட போலியான கணக்குகளை பற்றியே காணப்பட்டன. மேலும், 2017ஆம் ஆண்டில் 416 சம்பவங்கள் புகைப்படங்களை மூலமாக கொண்ட துஷ்பிரயோங்கள் என்றும் தெரியவந்தது.