இணையத்தின் மூலம் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என பார்க்கும் பொழுது, பல பெற்றோர்கள் இணைய கேமிங் பற்றி யோசித்து பார்ப்பது கூட இல்லை. இதை ஒரு பிரச்சனையாக கூட சிலர் கருதுவது இல்லை. இருப்பினும், இணைய விளையாட்டுகள் அளவுக்கு மீறி போகும் பொழுது அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்.
சிலர் சிறுவர்கள் இதற்கு அடிமையாக ஒரு நாளைக்கு 14 மணித்தயாலங்கள் வரை கணனியில் செலவழிப்பது உண்டு. உங்கள் பிள்ளையும் இணைய விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினால், பின்வரும் விடயங்களை பற்றி அவர்களிடம் முன்கூட்டியே கதைப்பது சிறந்தது.
ஒரு கணனியின் ஊடாகவோ அல்லது இணையத்தினூடாகவோ விளையாடப்படும் விளையாட்டுகள் இணைய விளையாட்டுகள் என அழைக்கப்படுகின்றன. நவீன விளையாட்டுகள் கணினிகள், லேப்டாப்கள், கன்சோல்கள் (எக்ஸ் பொக்ஸ், பிலே ஸ்டேஷன் போன்றன) மற்றும் கையடக்க தொலைபேசிகள் போன்றவற்றின் வழியாக பாவிக்கப்படலாம். இவை பல்வேறு வகைகளில் உருவாக்கப்படுகின்றன.
மல்டி-பிளேயர் கேம் (Multi-Player Game) என்பது பலர் இணையத்தினூடாக தொடர்பு கொண்டு விளையாடும் ஒரு விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டின் சூழல், சாதாரணமானவையிலிருந்து, மிகவும் சிக்கலான நவீன உலகங்களை கொண்டவைகளாகவும் இருக்கலாம்.
பல இணைய விளையாட்டுகள் தங்களுக்கென இணைய சமூகங்களை உருவாக்கி கொள்கின்றன. சில விளையாட்டுகள் ஏற்கனவே இருக்கும் உண்மையான சமூகங்களை பற்றி உருவாகி உள்ளன. இவ்வாறான சுற்றாடல்களில், இணையத்தினூடான சுரண்டல், கேலிகள் மற்றும்/அல்லது வன்முறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த கேமிங் பழக்கங்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும் பொழுது, இது உங்கள் வாழ்க்கையை பாதிக்க தொடங்கும். உதாரணத்திற்கு, நீங்கள் அதிகபட்ச நேரத்தை இணைய விளையாட்டுகளில் செலவிடும் பொழுது, உங்கள் வாழ்க்கையில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினருடன் நேரம் செலவழிக்க முடியாமல் போகும். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள போராடலாம்.
இந்த கேம்களை விளையாடுவதால் உங்கள் உடல்நலமும் பாதிக்கப்படலாம். தலைவலி, முதுகு வலி, கண்பார்வை குறைபாடு, உறங்க முடியாமை மற்றும் சரியான நேரத்தில் உணவு உற்கொள்ளாமை போன்றன அதிக நேரம் இந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதால் நீங்கள் முகம் கொடுக்க கூடிய சில பிரச்சனைகள் ஆகும்.
இந்த விளையாட்டுகளை பாவிப்பதில் எந்த ஒரு தவறு இல்லாவிட்டாலும், இதை நீங்கள் உங்கள் வயதுக்கு ஏற்ற முறையில் மற்றும் சரியான விதத்தில், முக்கியமாக உங்கள் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் பாவிக்க தெரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்கிரீன் டிபெண்டென்சி டிஸோடர்
நாம் இணையத்தினூடாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மற்றும் பாதிப்புகளை பற்றி பேசும் பொழுது, ஸ்கிரீன் டிபெண்டென்சி டிஸோடர் (Screen Dependency Disorder) பற்றி கதைப்பதும் மிக முக்கியம்.
இந்த சீர்குலைவின் மூலம் உங்கள் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம். இது அதிக நேரம் கணனி அல்லது ஸ்மார்ட் தொலைபேசிகளை பாவிப்போரை பாதிக்கக்கூடும். எம் நாட்டில் சிறு வயதிலேயே நாம் இவ்வாறான கருவிகளை பாவிக்க தொடங்குவதால், இந்த பிரச்சனையை பற்றி அறிந்து இருப்பது முக்கியம் ஆகும்.
பின்வருவன ஸ்கிரீன் டிபெண்டென்சி டிஸோடர் உள்ள ஒருவருடன் காணக்கூடிய சில அறிகுறிகள் ஆகும்:
- உங்கள் கருவிகளின் பாவனையை கட்டுப்படுத்த நீங்கள் சிரமப்படுவீர்கள்.
- புத்தகங்கள் வாசித்தல், விளையாடுதல் போன்ற வேறு நடவடிக்கைகளில் ஆர்வம் செலுத்த மாட்டீர்கள்.
- உங்கள் நபர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உறவுகள் மேற்கொள்ள அதிக ஆர்வம் செலுத்த மாட்டீர்கள்.
- இந்த கருவிகளை பாவிக்க முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் துக்கம் அல்லது கோபமடைவீர்கள்.
- உங்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் மறைவாக இந்த கருவிகளை பாவிப்பீர்கள்.
- காரணமில்லாமல் இந்த கருவிகளை பாவிக்க தொடுங்குவீர்கள்
![]() |
அருந்ததி வல்லவராயன் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார். இவர் கட்டுரைகள் எழுதுவில் மற்றும் சமூக சேவையில் ஆவல் கொண்ட ஒரு இளம் யுவதி. இவர் சிறுவர் பாதுகாப்பு, பால்நிலை வன்முறை ஒழிப்பு பற்றி பாலியல் நாட்டம் போன்ற தலைப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது. |
