இணையத்தின் பயன்களை பற்றி நீங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்த அதே வேளையில் இதனால் ஏற்படக்கூடிய பிரதிகூலங்களை பற்றி அவர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பதும் மிக முக்கியமாகும். இந்த வகையில், நீங்கள் அறிவுறுத்த வேண்டிய சில விடயங்கள் பின்வருமாறு.
இலங்கையில் இணையத்தினூடான பாதிப்புகள்
இணையம் போன்ற பரந்த எல்லைகளை கொண்ட வளங்களை நாம் தினசரி வாழ்க்கையில் பாவிக்கும் பொழுது, நாம் சில பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். தமது தனிப்பட்ட தகவல்கள் இதனால் சில சமயம் பாதிக்கப்படலாம். சேர்ட் நிறுவனத்திற்கு அணுக, இலங்கையில் இணையத்தை பாவிப்போர் பின்வரும் முறைகளில் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.
- பிசிங் – இது போலியான நிறுவனங்களின் பெயரில் மின்னஞ்சல்களை அனுப்பி கடவுச்சொற்கள், கிரெடிட் கார்ட் இலக்கங்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முயற்சி செய்தல்.
- தீங்கிழைக்கும் மென்பொருட்கள் – இவ்வகையான மென்பொருட்களால் கணணிகளும் கையடக்க தொலைபேசிகளை பாதிக்கப்படலாம். வைரஸ்கள், ஸ்பைவெயார், ட்ரொஜென்ஸ் போன்ற முறைகளின் மூலம் உங்கள் கருவிகளினுள் இந்த மென்பொருள் நுழைந்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடலாம்.
- மின்னஞ்சல் முகவரி திருடப்படல் – ஒருவரின் மின்னஞ்சல் முகவரி அவரின் அனுமதி இல்லாமல் திருடப்பட்டு, தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படல்.
இருப்பினும், இந்த பிரச்சனைகள் அனைத்திலும் ஒவ்வொரு வருடமும் அதிகமாக புகார் செய்யப்படுவது சமூக ஊடகங்கள் சம்பந்தப்பட்டவை ஆகும். ஒவ்வொரு வருடமும் இணைய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக புகார்களில், 90% சமூக ஊடகங்கள் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் பாதுகாப்பாக இருத்தல்
இணையம் என்பது நாம் தினமும் பாவிக்கும் ஒரு விடயமாகும். இதை நாம் அநேகமான வேளைகளில் பாவிப்பதனால், இதை எவ்வாறு சரியாக பாவிப்பது, இங்கு எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என நாம் முன்பே அறிந்து இருப்பது முக்கியமாகும். இந்த வகையில், நீங்கள் இணையத்தில் பாதுகாப்பாக இருக்க கடைபிடிக்க வேண்டிய சில பழக்கங்கள் பின்வருமாறு.
- உங்கள் முகவரி, விலாசம், மின்னஞ்சல் போன்ற தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிர வேண்டாம்.
- உங்களின் புகைப்படமொன்றையோ வீடியோ ஒன்றையோ இணையத்தில் பகிர முன் யோசியுங்கள். இதனை யார் வேண்டுமென்றாலும் பார்க்கக் கூடும்.
- சமூக ஊடகங்களை பாவிக்கும் பொழுது உங்கள் இரகசிய அமைப்புகளை (Privacy Settings) கவனியுங்கள்.
- உங்களை அசவுகரியத்திற்கு அல்லது வருத்தத்திற்கு உள்ளாகும் ஏதேனும் விடயமொன்றை நீங்கள் இணையத்தில் கவனித்தால், இந்த இணையதளத்தை விட்டு விலகுங்கள்.
- இணையத்தில் நீங்கள் பழகும் நபர்கள் சொல்வதெல்லாம் உண்மை என நினைக்க வேண்டாம்.
பாதுகாப்பான ஒரு கடவுச்சொல்லை பாவித்தல்
“வலிமையான ஒரு கடவுசொல்லை (password) பாவியுங்கள்” – இந்த அறிவுரையை நாம் பல சமூக ஊடகங்களில் கண்டுள்ளோம். உங்கள் சமூக ஊடக கணக்குகளை பாதுகாக்க சரியான கடவுச்சொல்லை தெரிவு செய்வது அவசியம். இவ்வாறு செய்வதற்கான சில உத்திகள் பின்வருமாறு:
- 12 எழுத்துகளுக்கு மேல்: உங்கள் கடவுசொல் நீண்டதாக இருக்க வேண்டும். இது குறைந்தது 12 எழுத்துகளையாவது கொண்டு இருக்க வேண்டும்.
- வெவ்வேறு வகைகளை பாவியுங்கள்: எழுத்துகள், இலக்கங்கள் என கலந்து பாவியுங்கள்.
- பொதுவானவற்றை பாவிக்க வேண்டாம்: ‘1234’ என்பது பாதுகாப்பான ஒரு கடவுச்சொல் அல்ல. எனவே, உங்கள் பெயர், பிறந்த நாள் என பொதுவான, இன்னொரு நபர் இலகுவாக கணிக்கக்கூடிய சொற்களை பாவிக்க வேண்டாம்.
- பதிலீடுகளை பாவிக்க வேண்டாம்: உங்களை பெயரை அல்லது பிறந்து நாளை பின்னோக்கி பாவிப்பதும் சிறந்த யோசனை அல்ல.
![]() |
அருந்ததி வல்லவராயன் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார். இவர் கட்டுரைகள் எழுதுவில் மற்றும் சமூக சேவையில் ஆவல் கொண்ட ஒரு இளம் யுவதி. இவர் சிறுவர் பாதுகாப்பு, பால்நிலை வன்முறை ஒழிப்பு பற்றி பாலியல் நாட்டம் போன்ற தலைப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது. |
