கடந்த சில ஆண்டுகளில், நாம் வாழும் முறை இந்த ஸ்மார்ட் தொலைபேசிகளால் பாரிய அளவில் மாற்றமடைந்து உள்ளது. நாங்கள் வானிலையை அறிந்து கொள்ளும் முறையில் இருந்து, ஒரு வியாபாரத்தை நடத்தும் முறை வரை, நாம் தினமும் செய்யும் சிறிய வேலைகள் அனைத்திற்கும் இந்த ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துகிறோம். இப்பொழுது சந்தையில் உள்ள ஸ்மார்ட் தொலைபேசிகள் விரைவாகவும் தொழிட்படுபவையாகவும் அதிக சேமிப்பு சக்தி உள்ளவையாகவும் காணப்படுகின்றன.
ஸ்மார்ட் தொலைபேசிகளை எம் பிள்ளைகள் இன்று அதிகளவில் பாவிக்கின்றனர. சில சமயங்களில் இதனால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்த வேளைகளில் தொலைபேசியை பிடுங்கி விடாமல், இந்த கருவியை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவு செய்வது தான் சரியான செயல். இந்த வகையில் நீங்கள், தெரிந்து கொள்ளவேண்டிய சில விடயங்கள் பின்வருமாறு.
இலங்கையில் தற்போதைய மற்றும் எதிர்கால ஸ்மார்ட் தொலைபேசி பாவனை
இலங்கை டெலிகாம்இற்கு அணுக, கையடக்க தொலைபேசிகளின் ஆதிக்கத்தின் காரணமாக சாதாரண தொலைபேசிகளை பாவனை வளர்ச்சி குறைந்து உள்ளது. 2017ஆம் ஆண்டில் 16.3% இல் இருந்த பாவனை 2017ஆம் ஆண்டில் 11.3% இற்கு குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்குள், இந்த பாவனை மேலும் குறைவடையும் என சந்தைப் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
இதே வேளை, இலங்கையின் கையடக்க தொலைபேசி பாவனை கடந்த ஐந்து ஆண்டுகளில் பாரிய அளவில் அதிகரித்து உள்ளது. 2012ஆம் ஆண்டில் 96% இல் இருந்த கையடக்க தொலைபேசி பாவனை, 2017ஆம் ஆண்டில் 126% இற்கு வளர்ந்து உள்ளது. இந்த வளர்ச்சி 2022ஆம் ஆண்டிற்குள், விற்பனையாளர்களுக்கு மத்தியில் உள்ள போட்டியால் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
ஸ்மார்ட் தொலைபேசியின் பயன்கள்
- உடனடி தொடர்பாடல் – ஸ்மார்ட் தொலைபேசிகள் கண்டுபிடிப்பால், எம் தொடர்பாடல்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ், டெக்ஸ்ட் மெசேஜ், வீடியோ கோல் போன்ற முறைகளின் மூலம் எம்மால் பிறருடன் உடனடியாக தொடர்பு கொள்ளக் கூடியதாக உள்ளது.
- இணைய பாவனை – கையடக்க தொலைபேசிகள் மூலம் தற்போது எம்மால் கணனிகளை பாவிக்காமல், வேண்டிய இடத்தில் இணையத்தை அணுக முடியும்.
- கமரா – இன்றைய “செல்பி” யுகத்தில், கமரா ஒரு முக்கிய கருவியாக கருதப்படுகிறது. எம் ஸ்மார்ட் தொலைபேசிகளில் ஒரு கமரா காணப்படுவதால், எமக்கு டிஜிட்டல் கமராக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை.
- பொழுதுபோக்கு – ஸ்மார்ட் தொலைபேசிகள் மூலம் பாடல் கேட்க, படம் பார்க்க, கேம்ஸ் விளையாட முடிவதால், இவை பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுகின்றன.
- கல்வி – எம்மால் இந்த தொலைபேசிகள் மூலம் இலகுவாக தகவல் பெற முடிவதால், பாட சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பார்ப்பது மூலமும் வினாக்களை பயிற்சி செய்வதன் மூலமும் எம் கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
- சமூக ஊடகங்கள் – ஸ்மார்ட் தொலைபேசிகளில் உள்ள சமூக ஊடகங்களின் மூலம் எம்மால் பல விடயங்கள் செய்யலாம். கூகுள் பிலே ஸ்டோரில் 2 மில்லியனுக்கும் அதிகமான சமூக ஊடகங்கள் உள்ளன. அதே வேளை, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 1.5 மில்லியன் ஊடகங்கள் உள்ளன. பாவனையாளர்கள் கையடக்க தொலைபேசிகளை 90% சமூக ஊடகங்களுக்குகாக தான் பாவிக்கின்றனர் என ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. இந்த ஊடகங்களை புகைப்படங்களை அழகுபடுத்த, டிக்கெட் பதிவு செய்ய, இணைய வியாபாரங்கள் செய்ய, நாட்காட்டியாக பாவிக்க முடியும்.
- ஜீ.பீ.எஸ் – ஜீ.பீ.எஸ் என்பது எமக்கு பிரயாணம் செய்யும் பொழுது உபயோகமாகும் ஒரு தொழிநுட்பமாகும். கையடக்க தொலைபேசிகளில் காணப்படும் இந்த தொழிநுட்பம், உலகில் எந்தவொரு மூலையிலும் உள்ள இடங்களை கண்டுபிடிக்க மற்றும் எமக்கு வேண்டிய இடங்களுக்கு செலவதற்கான சரியான பாதையை கண்டுபிடிக்க உதவும்.
ஸ்மார்ட் தொலைபேசியின் வரையறைகள்
- குறைந்த சமூக கலந்துரையாடல்கள் – அண்மைய ஆராய்ச்சிகள் படி, நாம் ஸ்மார்ட் தொலைபேசிகளை நாளுக்கு 5 மணித்தியாலங்கள் வரை உபயோகின்றோம் என தெரிய வந்தது.இதன் கூரணமாக நாம் எம் சமூகத்துடன், எம்மை சுற்றி இருப்போருடன் கலந்துரையாடம் பழக்கம் குறைந்து வருகிறது.
- கவனம் திரும்பல் – எமக்கு வரும் செய்திகள், மெசேஜ்கள், அறிவித்தல்கள் போன்றவற்றால் எம் கவனம் இலகுவாக திரும்பப்படுவதால் எமது தினசரி கடமைகளை செய்ய கடினமாக இருக்கலாம் மற்றும் அதிக நேரம் எடுக்கலாம்.
- உடல்நல பிரச்சனைகள் – ஸ்மார்ட் தொலைபேசிகள் சில சமயங்களில் உங்கள் உடல் நலத்தையும் பாதிக்கலாம். இந்த தொலைபேசிகளால் வெளியேறும் வானொலி அதிர்வெண்களின் வலிமை எம் உடம்பில் உள்ள திசுக்கள் மூலம் உறிஞ்சப்படும். மேலும், அதிக நேரம் ஸ்மார்ட் தொலைபேசி பாவிப்பதால், தூக்கம் இழக்கப்படலாம். இந்த தொலைபேசிகளில் காணப்படும் எச்.ஈ.வீ ஒளி உங்கள் கண் பார்வையையும் பாதிக்கலாம்.
- அடிமையாதல் – நீங்கள் காலையில் எழுந்த உடனே உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியை உபயோகிறீர்களா? நீங்கள் தினந்தோறும் இவ்வாறு செய்தால், நீங்கள் உங்கள் ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையாகிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களை மேலும் இணைய விளையாட்டுகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாக்க வழிவகுக்கலாம்.
- இரகசியதன்மை பாதிக்கபடல் – ஸ்மார்ட் தொலைபேசிகள் உங்கள் சொந்த உபயோகத்திற்காக உருவாக்கப்பட்டு இருந்தாலும், உங்கள் இரகசியத்தன்மைக்கு சில அச்சுறுத்தல்கள் உள்ளன. ஹேக்கிங் மூலம் மற்றும் வைரஸ்கள் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் உங்கள் தொலைபேசியில் இருந்து வெளியேறலாம். நீங்கள் உங்கள் ஸ்மார்ட் தொலைபேசி மூலம் இணையத்தை பாவிக்கும் பொழுது இந்த அபாயங்களுக்கு முகம் கொடுக்கலாம். இதனால் நீங்கள் வேறுபட்ட இணையதளங்களுக்கு செல்லும் பொழுது, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், உங்கள் ஸ்மார்ட் தொலைபேசிக்கு கண்டிப்பாக கடவுச்சொல் (பாஸ்வர்ட்) ஒன்றை பாவிக்க வேண்டும்.
ஸ்மார்ட் தொலைபேசி ஒன்றை திருத்துதல்
உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியை திருத்த நீங்கள் கடைக்கு செல்லும் பொழுது அவர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடக் கூடும். இதனால், நீங்கள் அடுத்து முறை உங்கள் தொலைபேசியை திருத்த செல்லும் பொழுது, பின்வருவனவற்றை பின்பற்றுங்கள்:
- நம்பக்கூடிய ஒரு கடைக்கு செல்லுங்கள். இது அங்கீகரிக்கப்பட்ட ஒரு கடையாக இருந்தால், நீங்கள் அவர்களின் சேவையை நம்பலாம்.
- உங்கள் தொலைபேசியின் செயற்பாட்டை பரிசோதித்து பார்க்க, இந்த கடைக்காரர் உங்கள் கடவுச்சொல்லை கேட்கலாம். உங்களுக்கு இதனை கொடுக்க விருப்பம் இல்லை என்றால், நீங்களே கடவுச்சொல்லை உள்ளிட்டு கொடுங்கள். கடைக்காரர் கடவுச்சொல்லை தரும் படி கட்டாயப்படுத்தினால், வேறு கடையொன்றுக்கு செல்லுங்கள்.
- இந்த திருத்தும் செயன்முறை நேரம் என்ன நடக்கின்றது என கவனம் செலுத்துங்கள். நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது, உங்கள் கருவியை அவர்கள் தவறான முறையில் உபயோகிக்க மாட்டார்கள்.
- உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியில் ஏதாவது தனிப்பட்ட தகவல்கள் காணப்பட்டால், அதனை திருத்த கொடுக்க முன் அவற்றை அழித்துவிடுங்கள் அல்லது உங்கள் கணனியில் அல்லது வேறு ஒரு கருவியில் தற்காலிகமாக பதிவு செய்யுங்கள்.
![]() |
அருந்ததி வல்லவராயன் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார். இவர் கட்டுரைகள் எழுதுவில் மற்றும் சமூக சேவையில் ஆவல் கொண்ட ஒரு இளம் யுவதி. இவர் சிறுவர் பாதுகாப்பு, பால்நிலை வன்முறை ஒழிப்பு பற்றி பாலியல் நாட்டம் போன்ற தலைப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது. |
