தொடர்பாடலை பற்றி பிள்ளைகளுடன் பேசுவோம்

இன்று ஒருவர் இன்னொருவருடன் கதைக்க வேண்டுமாயின் இதனை கண்ணிமைக்கும் நொடியில் செய்யலாம். தொழிநுட்ப வளர்ச்சியுடன் மனித தொடர்பாடல்களும் விரைவாக அபிவிருத்தியடைந்து உள்ளன. எம் பிள்ளைகள் இந்த தொடர்பாடல் தொழிநுட்பத்திற்கு மத்தியில் ஒன்றுக்கு ஒன்றாக வாழ்வதனால், இதனை பற்றி நாமும் அவர்களும் மேலும் தெரிந்து வைத்திருப்பது நல்ல விடயமாகும். இந்த வகையில் உங்கள் பிள்ளைக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்க கூடிய சில விடயங்கள் பின்வருமாறு.

தொடர்பாடலின் வளர்ச்சி

தொடர்பாடல் என்பது ஆதிகாலத்தில் இருந்து மனிதர்கள் தமக்கிடையே செய்திகளை பரிமாறிக்கொள்ள பயன்படுகிறது. கடந்த நான்கு தசாப்தங்களில் தொடர்பாடல் தொழிநுட்பம் பாரிய மாற்றங்களுக்கு உள்ளானது. இன்று கையடக்க தொலைபேசிகள் மூலம் இலகுவாக செய்திகள் அனுப்பக்கூடி உள்ளதால் (டெக்ஸ்டிங்), குறுகிய காலத்துக்குள் இலகுவான முறையில் தகவல்களை பரிமாறக்கூடியதாக உள்ளது.

பொதுவான தொடர்பாடல் சாதனங்கள்

தொடர்பாடல் சாதனங்கள் என்பன தனிப்பட்ட மற்றும் வியாபார நோக்கங்களுக்காக பாவிக்கப்படுகின்றன. இந்த சாதனங்களுக்கு இடையே குறிப்பிட்ட வித்தியாசங்கள் காணப்பட்டாலும் இவை அனைத்தினதும் நோக்கம் செய்திகளை பரிமாறிக் கொள்வதாகும். இன்று பொதுவாக பயன்படும் சில தொடர்பாடல் சாதனங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

  • தொலைபேசிகள் – தொலைபேசி என்பது நாம் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு தொடர்பாடல் சாதனமாகும். இந்த சாதனம் அண்மையில் மற்றும் தொலைவில் உள்ள நபர்களுடன் உரையாட பயன்படும். இன்று தொலைபேசிகளை வெவ்வேறு வடிவங்களில் வேறுபட்ட விலைகளில் வாங்கலாம்.
  • ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் – ஸ்மார்ட் தொலைபேசிகள் என்பன கணனி மற்றும் தொலைபேசி இரண்டிலும் உள்ள அம்சங்களை கொண்டுள்ளன. ஸ்மார்ட் தொலைபேசிகள் உற்பத்தியாளரை மற்றும் வகையை பொருத்து மாறலாம். சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் தொலைபேசியில் இணைய பாவனை, மின்னஞ்சல், டெக்ஸ்ட் மெசேஜ் போன்ற அம்சங்கள் காணப்படும். இதை தவிர பாட்டு கேட்க, படங்கள் எடுக்க மற்றும் வீடியோக்கள் பார்க்க இவை பயன்படுகின்றன. வியாபார மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக சமூக ஊடகங்களும் இவற்றில் காணப்படுகின்றன. ப்ளாக்ப்பெரி, ஐபோன், சம்சுங் மற்றும் ஹுவாவி என்பன தற்போது முன்னணியில் உள்ள சில ஸ்மார்ட் தொலைபேசி நிறுவனங்களாகும்.
  • லெப்டோப்கள் – மடிக்கணனி என அழைக்கப்படும் இந்த சாதனம், ஒரு சாதாரண கணணியை போலவே செயற்படும். எனினும் இந்த சாதனத்தை வேண்டிய இடத்திற்கு எம்முடன் எடுத்துசெல்லக் கூடியதாக உள்ளது. இவையும் மின்னஞ்சல் அனுப்ப, வீடியோ கலந்துரையாடல்களுக்கு மற்றும் வேறு முறைகளில் தகவல் பரிமாற்ற பயன்படும். டெல், எச்.பீ, ஆப்பிள் மற்றும் டோஷிபா என்பன தற்போது முன்னணியில் உள்ள லெப்டோப் நிறுவனங்களாகும்.
  • டேப்லெட் – இந்த சாதனம் ஒரு வயர்லஸ் கணணியை போன்றது. மடிக்கணியை போன்று, இந்த சாதனத்தையும் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். இந்த சாதனம் ஸ்மார்ட் தொலைபேசியை விட பெரியது எனினும் மடிக்கணணியை விட சிறியது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் மற்றும் அமேசான் நிறுவனத்தின் கிண்டல் என்பன தற்போது முன்னணியில் உள்ள நிறுவனங்கள் ஆகும்.
  • ரேடியோ – இந்த உபகாரம் பொதுவாக போலீஸ், வைத்திய நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளிலும் பயன்படும். இந்த சாதனம் வானொலி அலைகளில் மூலம் தகவல்களை பரிமாற்ற உதவும்.
  • இன்டர்நெட் ஒப் திங்ஸ் – உபகரணங்களுடன் மென்பொருட்கள், சென்சார்கள் மற்றும் இணையத்தை இணைப்பது மூலம் உருவாகும் சாதனங்கள் இன்டர்நெட் ஒப் திங்ஸ் என அழைக்கப்படும். இந்த உபகரணங்கள் பொதுவாக ஸ்மார்ட் உபகரணங்கள் எனவும் அழைக்கப்படும்.

தொடர்பாடல் தொழிநுட்பத்தின் எதிர்காலம்

அண்மையில் தொடர்பாடல் முறைகள் பாரிய மாற்றங்களுக்கு உட்பட்டு இருந்தாலும், எதிர்காலத்திலும் இவ்வாறான மாற்றங்கள் நிச்சயமாக ஏற்படும். இது நாம் ஒருவர் ஒருவருடன் தொடர்பு கொள்ளும் முறையை மாற்றியமைக்கும்.

  • வெர்ச்சுவல் பிரசன்ஸ் – அண்மையில் 3டீ புகைப்படங்கள் மற்றும் ஸ்கேன் தொழிநுட்பத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இதன் காரணமாக எதிர்காலத்தில் உங்களின் உருவத்தை இன்னொரு இடத்திற்கு அனுப்பி, அங்கிருக்கும்  நபர்களுடன் தொடர்பாட முடியும்.
  • இலத்திரனியல் கடதாசி – இன்று எம் கணணிகளிலும் ஸ்மார்ட் தொலைபேசிகளிலும் நாம் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வாசிக்கக் கூடியதாக உள்ளது. எதிர்காலத்தில் பத்திரிகைகள் மெல்லிய இலத்திரனியல் கருவிகளாக தொழிற்படும். இவற்றை வாசித்து முடித்தவுடன் வீசாமல், மடித்து வைத்து மறுநாள் உபயோகிக்கலாம்.
  • செயற்கை அறிவுத்திறன் – விஞ்ஞானிகளின் படி, எதிர்காலத்தில் அனைத்து தொடர்பாடல்களும் செயற்கை அறிவுத்திறன் மூலம் நடைபெறலாம். இதற்கான படிமுறைகளை இப்பொழுதே சில தொழிநுட்ப நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இதற்கு சிறந்த உதாரணம் மைல்ஸ்ட்ரோம்.

 

v அருந்ததி வல்லவராயன் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார். இவர் கட்டுரைகள் எழுதுவில் மற்றும் சமூக சேவையில் ஆவல் கொண்ட ஒரு இளம் யுவதி. இவர் சிறுவர் பாதுகாப்பு, பால்நிலை வன்முறை ஒழிப்பு பற்றி பாலியல் நாட்டம் போன்ற தலைப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்த கட்டுரை பக்கமூனோ, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து செய்யும் பக்நண்பர்கள் திட்டடத்திற்காக எழுதப்பட்டது.

Social Share: