புற்றுநோய் செல்களை வளர்க்கும் விதமாக, நாம் உண்ணும் உணவு முதல் சாதாரணமாக உபயோகிக்கும் அழகியல் பொருட்கள் வரை அனைத்திலும் ஆபத்துக்கள் நிறைந்திருப்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மை. அவைகள் எவை? ஏவை? அறிந்து நாம் அவற்றில் இருந்து விலகியிருப்பதே நலமாகும். சிறுவர்கள் முதல் தொடங்கி அனைவரையும் கலங்கவைத்துவிடுகிறது. பெண்கள் மட்டும் இவற்றிற்கு விதிவிலக்கா என்ன?. பெண்கள் சந்திக்கும் புற்றுநோய்களில் மிகவும் கொடிய பிரச்சனைகளில் ஒன்று தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெண்களுக்கு அதிகளவில் உடலின் மாற்றங்கள் ஏற்படுவதன் மூலம் பலவகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.

அவைகளில், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய்கள் குறிப்பிடத்தகுந்தது. இவைகளில் மிக அதிகமாக பரவிவருவது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகும். எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும் முறையான சிகிச்சை எடுத்தால் பூரண குணமாகும். பலவகையான புற்றுநோய்கள் மனித உடம்பில் உள்ள செல்களின் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது.
ஆனால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது கருப்பையில் அல்ல கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும், இதனுடைய அறிகுறிகள் தெரியாமல் இருக்கும். இது (HPV- Human Papilloma Virus) எனப்படும். வைரஸ் கிருமிகளால் 90மூ அதிகம் பெண்களின் கருப்பை அல்லது கர்ப்பப்பை வாயில் தோன்றும். உலகளவில் கர்ப்பப்பை வாய் புற்று நோய் நான்காவது பெரியளவில் ஏற்படும் புற்றுநோய் ஆகும்.

நோய் தொற்று மூலமாக மட்டும் பலருக்கு புற்றுநோய் ஏற்படுவதில்லை. புகைத்தல், HIV தொற்று, கருத்தடை, பல கருவுருதல், குடும்பக்கட்டுபாடு கருவிகள், மிக இளம் வயதில் உடலுறவில் ஈடுபடல், பலருடன் உடலுறவு கொள்ளல் போன்றவற்றின் மூலமாகவும் உருவாகிறது.
எச்.பி.வியின் பல்வேறு வகைகள் இனப்பெருக்க உறுப்பு மருக்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால், இவை வழக்கமாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு தொடர்பானவை அல்ல. எச்.பி.வியால் நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு நோயாளிக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படலாம். இதனால் இது ஒரு பால்வினை நோய் என்று கருதப்படுகிறது. ஆணுறைகளின் பயன்பாட்டினால் நோய்தொற்றைக் குறைக்கலாம். ஆனால், நோய்பரவுவதை அது எப்போதும் தடுக்காது. அதே போன்று நோய்த்தொற்றுடைய பகுதிகளோடு தோலுடன் தோல் தொடர்பு கொள்வதினாலும் எச்.பி.வி பரவலாம். புறத்தோலிலே பெரும்பாலும் வளர்கிறது என்று கருதப்படுகிறது. இந்தப் பகுதியைத் தூய்மை செய்தலின் மூலம் அவற்றின் வளர்ச்சியைத் தடுத்துக்கொள்ளலாம்.
உலக அளவில், கருப்பை வாய்ப் புற்று நோயானது நான்காவது பெரியளவில் ஏற்படும் புற்றுநோயாகவும், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் நான்காவது அளவில் இறப்பை ஏற்படுத்தும் புற்றுநோயாகவும் இருக்கின்றது. 2012ஆம் ஆண்டு 5,28,000 கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயாளர்கள் இருந்ததாகவும், அதில் 2,66,000 பேர் இறந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

உதாரணமாக, தற்போதைய தனியார் கல்லூரியின் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியில் சேரியில் வாழும் பெண்களில் பெரும்பாலோர் போதுமான சுகாதாரம் மற்றும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுகள் இல்லை. அவர்களது வாழ்க்கையோ, குடும்பத்தை மற்றும் வேலை செய்வதில் நாட்களை களித்து வாழ்ந்து வருகின்றனர். எனவே, தங்களது உடல் பிரச்சனைகள் மற்றும் உண்ணும் உணவுகளில் சற்றும் அக்கறை காட்டுவதில்லை. அதனால், இந்த கணக்கெடுப்பின் விளைவாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பெற்று, புற்றுநோய் அதன் அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு முறைகள் மற்றும் உணவு முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
புற்று நோய் முற்றிய நிலைக்கு வரும் வரையில் அதனுடைய அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்கும். இந்த நோய் இருக்கையில் உடல் உறவிற்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவதுடன், இடுப்புப் பகுதியில் வலி ஏற்படலாம். மேலும், நோய் முற்றிய நிலையில், அடிவயிறு, நுரையீரல்கள் அல்லது வேறு இடங்களில் எங்கேனும் நோய் பரவ வாய்ப்புள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் முற்றிய அறிகுறிகளாக சில குறிப்பிட்டுள்ளன அவை, பசியின்மை, எடை குறைதல், முதுகு வலி, கால் வலி, ஒற்றை கால் வீக்கம், புணர்புகை வீக்கம், உடல் உறவின்போது வலி மற்றும் எலும்பு முறிவுகள் போன்றவை.
சமீப காலமாக பேப் ஸ்மியர் சோதனையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதில் முதன்மைத் தொழில்நுட்பமாக இருக்கிறது. இப்புற்றுநோயின் ஆரம்ப நிலையை உறுதிசெய்கிறது. 32 முதல் 38 வயது வரையிலான பெண்களில் தொடர்ந்த ஸ்கிரீனிங் பரிசோதனைகளினால் கண்டறியப்படுகிறது.