நீங்கள் தினமும் இணையத்தில் சென்று பல்வேறு தகவல்களை படிக்கின்றீர்கள் அல்லவா ? ஆனால் அந்த தகவல் அனைத்தும் உண்மையா?,யாரும் நமக்கு நேரடியாக சொல்லாமல் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை நாங்கள் நம்பி விடுகின்றோம். ஆனால் இவை சில நேரங்களில் தவறான தகவல்களாகவோ வெறுப்பு பேச்சுக்களாகவோ இருக்கலாம்.இந்த இணைய உலகத்தில் நாம் எப்படி விழிப்புடன் இருக்கலாம் என்பது பற்றியே இந்த கட்டுரையில் நாம் சிந்திக்க போகின்றோம்.
1.தவறான தகவல்கள்
தவறான தகவல் என்பது உண்மையில்லாத தகவல்களை அல்லது துல்லியமற்ற தகவல்களை தவறாக புரிந்து கொண்டதினாலோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல். இது மூன்று வகைப்படும்.
1.Misinformation
தவறான தகவல்களை சரியாக இருக்கும் என நினைத்தும்,நோக்கம் பிழையின்றியும் தகவல்களை பகிர்தல்.
உதாரணம் :-“கொரோனா தடுப்பூசி போட்டால் 2 வருடத்தில் மரணம் நிகழும் ! “
2.Disinformation
நோக்கம் மற்றும் தகவல் பிழையாகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் தகவல்களை பகிர்தல்.
உதாரணம் :-“இலங்கை அரசாங்கம் ,நாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்களுக்கு மாதம் ரூ .10000 உதவி தொகை வழங்குகிறது -மற்றவர்களுக்கு இல்லை !”
இது ஒரு திட்டமிட்ட பொய்யான செய்தியாக சமூக ஊடகங்களில் பரவியது. இந்தத் தகவலுக்கு எந்தவிதமான அரசாங்க அறிவிப்பும் ஆதாரமும் இல்லை. இது மற்ற சமுதாயங்களிடம் கோபத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்பட்டது.
3.Malinformation (like rumors/வதந்தி)
உண்மை தகவல்களை தவறான நோக்கத்தில் தேவையில்லாத நேரத்தில் மாற்றி மாற்றி பகிர்தல்.
உதாரணம்:- ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் கடந்தகாலத்தில் நடந்த தனிப்பட்ட பிழை அல்லது குற்றச்சாட்டு உண்மையான விவரம் சமூக ஊடகங்களில் தேர்தல் காலத்தில் பரப்புதல்.
இந்த மூன்று வகையான தவறான தகவல்களையும் வென்வரி படத்தில் குறித்தால் ,
எவ்வாறு தகவல் சரியானதா என சரி பார்க்கலாம்?
- மூல ஆதாரத்தை தேடுதல்
- துணை ஆதாரத்தை தேடுதல்
- சார்புநிலையை தேடுதல்
- திகதி உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்தல்
- முழுமையாக வாசித்தல்
- பரபரப்பானதா என சந்தேகித்தல்
- பின்னணியை சரி பார்த்தல்
- உண்மையை சரிபார்ப்பவர்களிடம் ஆலோசனை கேட்டல்
உதாரணம் :-Hashtag Generation
- நிபுணர்களிடம் கேள்விகளை கேட்டல்
- AI மூலமாக உருவாக்கப்பட்டதா என்று சரிபார்த்தல்
உதாரணம் :-HIVE Moderation
- Google Fact Check tools ஊடாக சரிபார்த்தல்
- DB Known Fakes போன்ற ஊடகங்களின் மூலமாக தகவல்களை சரிபார்த்தல்
தவறான தகவல்களின் விளைவுகள்
- சமூக குழப்பம்
தவறான தகவல்கள் சமூகத்தில் உண்மையை புரிந்து கொள்ள தடையாக இருப்பதால் மக்கள் கருத்து மாறி குழப்பத்தில் விழுகிறார்கள்.
- அந்தரங்க நம்பிக்கையின் இழப்பு
மக்கள் செய்தித்தளங்கள் ,அரசு அல்லது அறிவியல் நம்பிக்கை குறைகின்றது .இது சமூக அமைதிக்கு சேதம்.
- வெறுப்பு சொற்கள் மற்றும் வன்முறை
தவறான தகவல்கள் வெறுப்பை பரப்பி, இனங்களுக்கிடையே வன்முறை,கலவரங்களுக்கு வழிவகுக்கும்.
- மருத்துவப் பிரச்சினைகள்
உண்மையில்லாத மருத்துவ தகவல்களின் பரவல் மக்கள் தவறான மருந்து முறைகள்,தடுப்பூசி எதிர்ப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
- அரசியல் சீர்திருத்தங்களில் பாதிப்பு
தவறான தகவல்கள் தேர்தல் முடிவுகளை பாதித்து ஜனநாயக முறையை வலிமையிழக்கச் செய்யும்.
- அரசியல் மற்றும் பொருளாதார இடர்நிலை
மோசமான தகவல்கள் அரசியல் மற்றும் பொருளாதார சூழல்களை பாதித்து நாட்டின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தலாம்.
2.வெறுப்புப்பேச்சு
வெறுப்புப்பேச்சு என்பது எந்த வகையான தகவல் தொடர்பு பேச்சு,எழுத்து,நடத்தையிலான தாக்குதல் அல்லது ஒரு நபர்/ஒரு குழுவை அவர்கள் யார் என்பதன் அடிப்படையில் வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அவர்களின் மதம், இனம் ,தேசியம்,சாதி,நிறம்,வம்சாவளி,பாலினம் அல்லது பிற அடையாள காரணியின் அடிப்படையில் இழிவாக அல்லது பாகுபாடு ரீதியாக பேசுதல் ஆகும்.
உதாரணம் :- 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு ,தவறான செய்திகள் முஸ்லீம்கள் மீது வெறுப்பை தூண்டியது.
- முற்கற்பிதங்கள்
முற்கற்பிதங்கள் என்பது பிற குழுக்களை பற்றி முற்றிலும் மறுசீலனை செய்யாத பொதுமைப்படுத்தல் ஆகும் .அவை மதிப்பீட்டு பார்வையை, அபிப்பிராயத்தை கொண்டதாக இருக்கலாம் அல்லது அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம் .
- தப்பெண்ணம்
தப்பெண்ணம் என்பது மற்றைய நபர்கள் அல்லது சமூகக் குழுக்களைப் பற்றி பொதுவாக எதிர் மறையாக மதிப்பிட்டு தீர்த்து பொதுமைப்படுத்தல் ஆகும்.
- இனவாதம்
இனவாதம் என்பது இனம் இன சமூகம் அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு எந்த குணாதிசயத்தையும் அடிப்படையாகக் கொண்டு இடம்பெறும் ஒரு பாரபட்சம் ஆகும் ,இது பெரும்பாலும் ஒருவரை நியாயமற்ற முறையில் நடத்த வழிவகுக்கிறது
4.பாகுபாடு
பாகுபாடு என்பது முற்றிலும் மறுபரிசீலனை செய்யாத எந்தவொரு பாரபட்ஷமான தப்பெண்ணத்தின் விளைவாகவும் ஏற்படும் நியாயமற்ற நடத்தை ஆகும் . இதனுள் இன ரீதியற்ற தப்பெண்ணமும் உள்ளடங்கும் .
5.வெறுப்புப்பேச்சு
வெறுப்புப்பேச்சு என்பது ஒரு நபர் அல்லது குழுவைப் பற்றிய எதிர்மறையான வெளிப்பாடு ஆகும் .இது பெரும்பாலும் பாரபட்ஷம்,பரவல்,தூண்டுதல்,ஊக்குவித்தல் அல்லது இன வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின்மையினை நியாயப்படுத்தல் என்பனவற்றை அடிப்படையாக கொண்டவை.
நாட்டின் சட்டங்கள் மற்றும் பேச்சு சுதந்திரம் சார் சூழ்நிலையை பொறுத்து குறிப்பிட்ட நிகழ்வுகள் குற்றமாக அல்லது குற்றமற்றதாக கருதப்படலாம்.
6.வெறுப்புக்குற்றம்
வெறுப்பு குற்றம் என்பது ஒரு குழு அல்லது தனி நபருக்கு எதிராக ,அவர்களின் அடையாளம் குறித்த பரபட்சத்தின் அடிப்படையில் செய்யும் ஒரு சட்டவிரோத செயல் ஆகும் .
வெறுப்புப்பேச்சின் விளைவுகள்
- சமூக சீர்கேடுகள்
வெறுப்பு பேச்சு சமூகக் குழுக்களுக்கு இடையிலான நம்பிக்கையையும் ஒற்றுமையையும் அழிக்கிறது. இது மதம், சாதி, மொழி போன்ற அடிப்படைகளில் பிளவுகளை ஏற்படுத்துகிறது. - வன்முறையின் தூண்டுதல்
வெறுப்பு மொழிகள் சில சமயங்களில் கலவரங்கள் மற்றும் வன்முறைகளுக்கு வழிவகுக்கக்கூடும். அதுவே ஒரு பெரிய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையாக மாறலாம். - உளவியல் பாதிப்புகள்
வெறுப்பு பேசப்படும் சமூகங்களின் உறுப்பினர்கள் தாழ்வு உணர்வில் சிக்கிக்கொள்கிறார்கள். மனஅழுத்தம், பயம், தனிமை ஆகியவற்றால் அவை பாதிக்கப்படலாம். - கொள்கை மற்றும் அரசியல் பாகுபாடுகள்
சில அரசியல் அமைப்புகள் வெறுப்பு பேச்சுகளை தங்கள் ஆதரவாளர்களை கவரும் கருவியாக பயன்படுத்தலாம். இது ஜனநாயகத்தின் அடித்தளங்களை மங்கச் செய்யும். - மீட்பில்லா சிக்கல்கள்
சமூக ஊடகங்களில் விரைவாக பரவும் வெறுப்பு பேச்சுகள் திடீர் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும், அது ஒருவரின் வாழ்க்கையே வீணாக்கக்கூடும்.
தவறான தகவல்களுக்கும் வெறுப்புப் பேச்சுக்கும் இடையிலான தொடர்பு என்ன?
தவறான தகவல்களும் வெறுப்புப் பேச்சும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. பல சமயங்களில், ஒரு குறிப்பிட்ட குழுவை பற்றி தவறான செய்தி அல்லது வதந்தி இணையத்தில் பரவும்போது, அந்த குழுவுக்கு எதிராக கடுமையான வெறுப்புப் பேச்சுகள் தோன்றுகின்றன.
உதாரணம்:-
- ஒரு சமூகத்தை குறிவைக்கும் போலியான செய்தி வெளியானால், அதனைத் தொடர்ந்து இணையத்தில் வெறுப்பான கருத்துக்கள் தோன்றும்.
- பொய்யான வீடியோவுடன் “இந்த மக்கள் இப்படித்தான்!” என்ற எழுத்துகளும், மீம்களும் பரவுகின்றன.
தீர்வுகள் மற்றும் பரிந்துரைகள்
- ஊடக கல்வி: பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமூக ஊடகங்களில் பொறுப்புடன் செயல்படுவது குறித்து கற்பிக்க வேண்டும்.
- தகவல் சரிபார்ப்பு: நமது சமூகத்தில் தவறான செய்திகளை நம்பாமலும் பகிராமலும் இருப்பது முக்கியம்.
- அமைதிக்குரிய பேச்சு: மதத் தலைவர்கள், சமூக தலைவர்கள் இணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
- தனிநபர் பொறுப்பு: ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் சிந்தித்து பேச வேண்டும்.
முடிவுரை
இலங்கை ஒரு பன்முக சமூகம் – இனம், மதம், மொழி, கலாசாரம் என எல்லாம் கலந்தமையமாய் இருக்கிறது.
இந்த அமைப்பை காக்க வேண்டும் என்றால், தவறான தகவல்களை எதிர்க்கவும், வெறுப்பை விலக்கவும் நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
“வார்த்தைகள் வாளாய் மாறக்கூடும். ஆனால், அது பூவாய் மலர வேண்டுமென்றால் நாம் அன்பையும் அமைதியையும் பேச வேண்டும்.”
“தனி நபர் மாற்றமே உலக மாற்றம்”
“இலங்கை எதிர்காலம் இணையத்தில் இல்லை – உண்மையில் இருக்கிறது. தவறான தகவல்களும் வெறுப்பும் இல்லாத, உண்மையும் அன்பும் நிறைந்த இணையச்சூழலை உருவாக்குவதே நம் அனைவரின் பொறுப்பு.”