மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள்

மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள்

மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் நாம் பல்வேறு உடல் மற்றும் மன அசௌகரியங்களை எதிர்கொள்கிறோம்.

மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் தலைவலி

பசியின்மை

தொடைகள் மற்றும் கால்களில் வலி

முதுகுவலி போன்றவை பொதுவான அறிகுறிகளில் சில.

மாதவிடாய் ஏற்பட, கருப்பைச் சுவர்கள் கழன்று வெளியேற வேண்டும், இது கருப்பைச் சுருக்கங்கள் மூலம் நிகழ்கிறது. கருப்பைத் தசைகள் சுருங்கும்போதும், கருப்பைச் சுவர் கிழிந்து போகும்போதும், நமக்கு அடிவயிறு மற்றும் முதுகுவலி ஏற்படும். இந்த வலி பொதுவாக வயதுக்கு ஏற்ப குறையும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உடற்பயிற்சி, ஓய்வு, சுயஇன்பம், சூடான குளியல் அல்லது பனடோல் போன்ற வலி நிவாரணிகள் மாதவிடாய் பிடிப்புகளால் ஏற்படும் வலியைப் போக்க உதவும். வலி கடுமையாக இருந்து, உங்கள் அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதைத் தடுத்தால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

Social Share: