பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை

பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைசில திருநங்கைகள் தங்கள் பாலின அடையாளத்திற்கு ஏற்றவாறு பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். அனைத்து திருநங்கைகளும் அத்தகைய அறுவை சிகிச்சைக்கு உட்படுவதில்லை. இதற்கு பணமின்மை, தங்கள் துணையின் விருப்பமின்மை, தங்களின் விருப்பம் இன்மை மற்றும் அறுவை சிகிச்சை குறித்த பயம் போன்ற பல காரணங்கள் உள்ளன.

நீங்கள் பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால், தகுதிவாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த சேவை வழங்குநர்களின் சேவைகளை நாட வேண்டும்.

வேறு எந்த அறுவை சிகிச்சையையும் போலவே, சரியான சுகாதாரம் இல்லாமல் செய்யப்பட்டால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு உங்கள் உண்மையான சுகாதார நிலை குறித்து சேவை வழங்குநரிடம் தெரிவிப்பது முக்கியம். உதாரணமாக, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சுகாதார நிலைமைகள் வெளியிடப்பட வேண்டும்.

Social Share: