நம்மைப் பாதுகாப்பார்கள் என்று நாம் முழுமையாக நம்பியவர்களே நமக்கு ஏமாற்றத்தையும் துரோகத்தையும் வழங்கும்போது, ஒரு பெண்ணாக அந்த வலியை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினம். அப்போது, “யாரை நம்புவது?” என்ற கேள்வியைவிட, “இனிமேல் யாரையும் நம்பக்கூடாது” என்ற எண்ணமே மனதில் வலுவாக உருவாகிறது.
அப்பா, அண்ணா, தம்பி, காதலன், நண்பன் என நம் வாழ்க்கையில் நெருக்கமாக இருப்பவர்கள்மீது நாம் கொள்ளும் அன்பும் நம்பிக்கையும், “நீ என்னை முழுமையாகப் பாதுகாப்பாய்” என்பதற்காக மட்டும் அல்ல. எந்தச் சூழ்நிலையிலும் என்னை விட்டுக்கொடுக்காமல், எனக்காக நின்று, என் தனியுரிமையையும் கண்ணியத்தையும் மதிப்பாய் என்ற நம்பிக்கையில்தான் அந்த உறவுகள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால் அந்த நம்பிக்கையே உடைக்கப்படும்போது, ஒரு தனிநபர்மீது ஏற்பட்ட ஏமாற்றம், சில நேரங்களில் ஒட்டுமொத்த ஆண் சமூகத்தின் மீதான வெறுப்பாகவும் மாறிவிடுகிறது. நல்லவர், கெட்டவர் என்று பிரித்துப் பார்க்கக்கூட மனம் மறுக்கும் அளவுக்கு அந்தப் பாதிப்பு ஆழமாக பாதித்தது.
இது நான் வாழும் நான் அதிகம் நேசம் கொண்ட நான் முழுமையாக பாதுப்பாக உணர்ந்த என் திருநாட்டின் நிலை என எண்ணும் போது வெட்கத்துடனும் பயத்துடனும் தலைகுனிகின்றேன்.
சமூக ஊடகங்களான Facebook, Telegram, WhatsApp போன்ற தளங்கள் மூலம் தன் அம்மா , தன் தங்கை ,காதலி,மனைவி என தன் அருகில் உள்ள பெண்களின் புகைப்படங்கள், காணொலிகள் சமூக வலையதளங்களின் ஊடாக விற்க்கபடுகின்றது.இத்தகைய நடவடிக்கைகள் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது இன்று மட்டும் தோன்றிய பிரச்சினை அல்ல; பல காலமாக வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்துவரும் இணையவழிக் குற்றமாகும்.
2025ஆம் ஆண்டிலும், அனுமதியின்றி பெறப்பட்ட இலங்கைப் பெண்களின் தனிப்பட்ட படங்கள் இணையத்தில் பகிரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இத்தகைய சம்பவங்கள், ஒரு புகைப்படம் அல்லது காணொளி இணையத்தில் பகிரப்படுவது வெறும் “ஆன்லைன் செயல்” அல்ல என்பதை நமக்கு உணர்த்துகின்றன. அதன் பின்னால் ஒரு மனிதரின் தனியுரிமை, கண்ணியம், மன அமைதி மற்றும் எதிர்கால வாழ்க்கை அடங்கியுள்ளது. இலங்கையில் ஃபேஸ்புக், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகக் குழுக்கள் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆபாச காணொளிகளை பணத்திற்காக விற்கும் மோசடி நெட்வொர்க் இயங்கி வருவது பரவலாக பேசப்படுகின்றது.இது முற்றிலும் புதிய பிரச்சினை அல்ல. 2025ஆம் ஆண்டிலும், அனுமதியின்றி பெறப்பட்ட இலங்கைப் பெண்களின் ஆயிரக்கணக்கான தனிப்பட்ட படங்கள் இணையத்தில் பகிரப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக செய்தி வெளியானது. அந்தச் சம்பவத்தில் 9,605 கோப்புகள் இருந்ததாக Sunday Times செய்தி தெரிவித்தது.
இவர்தான் ,இந்த குழு தான் என கண்டறிந்து தண்டனை கொடுக்கும் அளவிற்க்கு சிறிய எண்ணிக்கை அல்ல,நாம் வீட்டில் காணும் நம்முடன் வசிப்பவர்கள்,அயல்வீட்டில் உள்ளவர்கள், நண்பன் என நாம் கண்களில் காணும் 50 சதவீதமானவர்களில் ஒருவர் இதில் ஈடுப்படுவர்.இவர்களின் போலியான சமூகவலயதளக்கணக்குகள் ஊடாக தன் தாயின் சகோதிரியின் நண்பியின் புகைப்படம் விற்கப்படுகின்றது.
மிகவும் வேதனையான கேள்வி என்னவென்றால், நமக்கு நெருக்கமானவர்களின் புகைப்படங்களும் காணொளிகளும் அவர்களுக்குத் தெரியாமலேயே எவ்வாறு பிறரிடம் சென்றடைகின்றன என்பதுதான். காதல், திருமணம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் அல்லது காணொளி, அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி பிறரிடம் பகிரப்படுவது மிகப்பெரிய துரோகமாகும்.இந்த துரோகம் தற்போதய சமூகத்திற்கு இடையில் எவ்வித சங்கடமும் இன்றி இயல்பாக நடைப்பெறுகின்றது.
இதில் புகைப்படங்களைப் பகிர்பவர்கள் மட்டுமல்ல, அவற்றைத் தேடிப் பார்ப்பவர்கள், சேமிப்பவர்கள், மற்றவர்களிடம் பகிர்பவர்கள் மற்றும் அதனைப் பற்றி கேலி அல்லது பாலியல் தன்மையுடைய கருத்துகளைப் பதிவிடுபவர்களும் சமூகப் பொறுப்பிலிருந்து தப்ப முடியாது. ஒருவரின் துயரத்தை பொழுதுபோக்காகப் பார்க்கும் மனநிலை உருவாகுவது மிகவும் ஆபத்தானது. பாலியல் ரீதீயாக கணவன் மனைவி அல்லது காதலன் காதலி உடன் ஈடுப்படும் அபாசவீடியோ எப்படி கசிவிற்க்கு வரும்? காதல்,அன்பின் வெளிப்படையாக உறவுகொள்ளும் ஒரு வீடியோ எவ்வாறு சமூக வலையதளத்தில் மற்றவர்களின் பார்வைக்கு வரும்? இதில் விற்பவர்,பார்வையாளர்களுக்கு அப்பாற்பட்ட கூட்டம் கருத்து பதிவிடுவர்கள்(commends) இவர்கள் கருத்து பதிவிடுவதன் மூலம் பாலியல் சந்தோசத்தை பெருகின்றார்களா?
“என் தங்கைக்கு சிறுவயதில் இருந்து நான் அவளுடன் பாலியல் உறவில் ஈடுப்படுகின்றேன் தற்போது அவள் பருவம் அடைந்துவிட்டால்,அவளுடன் யாரும் பாலியல் உறவு கொள்ளவிரும்பினால் மேசஜ் செய்யவும்”
“என் அம்மாவுடன் செக்ஸ் செய்யவிரும்புவர்கள் அழைக்கவும்’
இவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும், இத்தகைய மனநிலையை உருவாக்கும் சமூகச் சூழல் என்ன?”,என்பது அதிர்ச்சியை தரும் சிந்தனையாக மாறுகின்றது.
இந்த செய்தியை சமூகவலையதளத்தின் ஊடாக நான் பார்க்கும் போது.என் உடல் சிலிர்த்தது நான் ஒரு நிமிடம் சிந்தித்தேன்.இவர்களின் மத்தியில் தானே என் நாட்ககள் நகர்ந்துள்ளது, நகரபோகின்றத?
ஆனால் இதனை எதிர்த்து பலரின் குரல் இதற்க்காக எழுப்பப்படும் போது ஒரு சமூக பற்று கொண்ட மக்கள் கூட்டம் உள்ளனர் என அறியலாம்.பல காலமாக இவை தொடர்ந்து நடைப்பெற்றாலும் இதற்க்காக எவரும் குரல் எழுப்பவோ அல்லது சட்டங்கள் கொண்டு வரவோ இல்லை.தற்போது பலர் தங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பகிர்கின்றனர்.இவை பரவலாக வெளிகொண்டுவரப்பட்டது.மக்கள் மத்தியில் பேசப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், போலி சமூக ஊடகக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டு, நெருக்கமானவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள்/காணொளிகளை விற்பனை செய்ய முயற்சித்த சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சில குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.இது பாதிக்கப்பட்ட நபரின் தனியுரிமை சட்ட உரிமையை (Right to Privacy) முற்றாக மீறும் செயலாகும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும், இலங்கைக்குள் இந்தக் குழுக்களை நிர்வகிக்கும் உள்ளூர் ஏஜெண்டுகள் மற்றும் அட்மின்கள் (Admins) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (CCID) தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இலங்கைப் பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றுக்கு விசாரணைக்காக தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் உதவி தேவைப்பட்டால், இலங்கை CERT-இன் அவசர இணையப் பாதுகாப்பு உதவி எண்ணான 101-ஐ தொடர்புகொள்ளலாம். Sri Lanka CERT – Incident Reporting.
இத்தகைய இணையவழி நடவடிக்கையால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் இத்தகைய பிரச்சினையில் சிக்கியிருப்பதாக சந்தேகம் இருந்தால், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் 1938 மற்றும் 1929 என்ற இலவச உதவி எண்கள் மூலம் உளவியல் ஆலோசனை, சட்ட உதவி மற்றும் தேவையான ஆதரவைப் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளம் ஆண்கள் மற்றும் சிறுவர்களுடன் பேசுங்கள்: அவர்கள் பார்ப்பதைப் பற்றி வெளிப்படையான, பாரபட்சமற்ற உரையாடல்களைத் தொடங்குங்கள். விமர்சன சிந்தனையை ஊக்குவியுங்கள். இந்த உள்ளடக்கம் அவர்களை எப்படி உணர வைக்கிறது, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், என்ன சான்றுகள் வழங்கப்படுகின்றன, மற்றும் யார் பயனடைகிறார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். இந்த உரையாடல்களைத் தொடருங்கள்.
ஒருவரின் புகைப்படத்தைப் பகிர்வதற்கு முன், “இது எனக்குச் செய்யப்பட்டால் நான் எப்படி உணர்வேன்?” என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். ஒரு புகைப்படம் நமக்கு வெறும் புகைப்படமாக இருக்கலாம்; ஆனால் அது மற்றொருவரின் வாழ்க்கை.