சம்பிரதாயங்களும் சடங்குகளும்

இது ஒரு பெண் தன் எதிர்கால குழந்தைக்கு தன் கடந்த மாதவிடாய் காலத்தை பற்றி கூறும் கதையாகும்..

 

வந்தாறுமூலை,மட்டக்களப்பு

 

எனக்கு 11 வயது ஆக இருக்கும் போது முதலாவது மாதவிடாய் ஏற்பட்டது.அப்போது நான் சிறிய பிள்ளை எனக்கு மாதவிடாய் என்னவென்றே தெரியாத ஒரு வயது. எனக்கு முதலாவது மாதவிடாயின் போது இரத்தம் வெளிவந்து.என் ஆடையில் இருப்பதை எனது அக்கா தான் கண்டார்.நான் ஸ்கூல் செல்வதற்கு தயாராகும் போது தான் அது நடந்தது.என்னை அக்கண்மே உள்லெ கூட்டிச் சென்று ஒரு அறையில் வைத்தார்கள் .அக்காலப்பகுதியில் சைவ சயத்தவர்களின் விரத காலம் ,என் குடுபத்திலும்  அனைவரும் அவ்விரத்தை பிடிப்பவர்களாக தான் இருந்ந்தார்கள். நான் வயத்திற்க்கு வந்த காரணமாக அந்த வருடத்தில் யாரும் அந்த விரத்தை பிடிக்க வில்லை.

 

என் அம்மா.என்னை வெள்ளை துணியால் மூடி உட்க்கார வைத்தார்கள் அருகில் இரும்பு கம்பியையும் வைத்தார்கள்.எனக்கு எதுவும் புரிய வில்லை நான் கேட்டேன் எதற்கு அம்மா இந்த இரும்பு கம்பி என்று? உனக்கு காத்து கருப்பு படும் அதனால் தான் இந்த இரும்பு கம்மி , பின் மாம முறையானவர்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும் அப்படி முறையான மாமவிற்க்கு வழக்கமாக எங்கள் ஊரில் தண்ணி ஊற்றும் நிகழ்வு பெரிதாக நடக்கும்.

 

ஆனால் எனக்கு அப்படி நடக்கவில்லை, ஏன்னெறால் அக்காலப்பகுதியில் விரதம் என்பதால் மாதவிடாய் போன்ற தீட்டு வீட்டிற்க்கு எவரும் வரமாட்டார்கள்,எனக்கு மூன்று பேர் நின்றுதான் குளிப்ப்பாட்டினார்கள்.எனக்கு மிகவும் கவலையாக இருந்த்து. அந்த வயதில் எனக்கு எதும் புரியவில்லை எல்லோரும் வந்தால் எனக்கு விளையடலாம், சந்தோசமாக இருக்கலாம்.என்று நினைத்தேன். அப்படி என்னை குளிப்பாட்டும் போது செறுப்பு விளக்கமாறு வைத்தார்கள்.

 

பிறகு எனக்கு வித்தியாசமான உணவுகளை எல்லாம் தந்தார்கள்.நாட்டு கோழி முட்டை பச்சையாக வேப்ப இலை ,துளசி இலை, நல்லெண்ணை சோறு ,எல்லுருண்டை, கத்திரிக்காய் பொரியல். 30 நாட்கள் வெளியில் செல்லவிடவில்லை ஸ்கூல் அனுப்பவில்லை,பரீட்சைகளை மிஸ் பண்னினேன், முக்கியமாக எனக்கு அந்த உணவுகளை சாப்பிடிக்கவில்லை.வெளியே செல்லும் போது இரும்பு கொண்டு போவது எனக்கு பயமாக இருந்தது உண்மையில் காத்து கருப்பு அன்றிவிடும் என்று,கோயில் செல்ல முடியவில்லை,மாமா கல்யாணம் செய்தார் அதற்கும் என்னை அழைத்து செல்லவில்லை.

 

என்னால் இவற்றை ஏன் எனக்கு செய்கின்றீர்கள் என்று கேட்க முடியவில்லை. பிடிக்கவில்லை என்று சொல்லமுடியவில்லை. இதை எல்லாம் கண்டிப்ப பண்ன வேண்டும் சம்ரதாயம் என்று சொன்னார்கள்.காலம்காலமாக கடைப்பிடிப்பது என்று கூறினார்கள்.இவை அணைத்தும் தேவையற்றது என்றும் என் அனுபவம் போல் பயத்துடம் வாழ தேவையில்லை என்று என் அடுத்த சந்ததியருக்கு கூறுவேன்.
 

Social Share: