எச்.ஐ.வி பரிசோதனைகள்

எச்.ஐ.வி தொற்று உள்ளதா என்பதை எச்.ஐ.வி பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். அவ்வாறு பரிசோதிப்பதின் மூலம் மன அமைதியை பெறலாம்.

பரிசோதனையின் முடிகளில் உங்களுக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை என்பதைக் காட்டினால், அது எதிர்கால எச்.ஐ.வி ஆபத்து சூழ்நிலைகளைக் கண்டறிந்து அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

உங்கள் பரிசோதனையின்  முடிவுகளில் நீங்கள் எச்.ஐ.வி உடன் வாழும் நபர் என அறிந்து கொண்டால் தேசிய எச்.ஐ.வி தடுப்புத் திட்டத்தின் ஊழியர்கள் உங்களுக்குப் பின் செய்ய வேண்டிய பரிசோதனைகளை ஆலோசனைகளையும் வழங்குவாரகள், எச்.ஐ.வி பற்றிய சிறந்த புரிதலை உங்களுக்கு வழங்கவும் உறுதிபூண்டுள்ளனர்.சிகிச்சைக்குத் தயாராகவும், பாலியம் நபர்களை மற்றும் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்கவும் எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. எச்.ஐ.வி பரிசோதனை என்பது ஒரு நேர்மறையான வாழ்க்கையின் தொடக்கமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எச்.ஐ.வி நிலை என்பது தனி நபரின் விடயமாகும், மேலும் அதை உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிவிக்கக்கூடாது. இரகசியம் காக்கப்படும்  என்பது தேசிய எச்.ஐ.வி தடுப்புத் திட்டத்தின் ஊழியர்களின் பொறுப்பாகும்.

தேசிய எச்.ஐ.வி தடுப்புத் திட்டம் 2024 ஆம் ஆண்டில் 1,244,143 எச்.ஐ.வி பரிசோதனைகளை நடத்தி, எச்.ஐ.வி உடன் வாழும் 824 பேரை அடையாளம் கண்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் அரசாங்கத்தினால் எச்.ஐ.வி மருந்துகள் வழங்கப்படுகின்றது.

நீங்கள் எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ள விரும்பினால், நாடு முழுவதும் தேசிய எச்.ஐ.வி தடுப்புத் திட்டத்தால் நடத்தப்படும் பரிசோத்னை நிலையங்களில் (கிளினிக்கில்) அதைச் செய்வதுதான் சிறந்த இடம்.Know4Sure வலைத்தளம் மூலம் இந்த அரசு கிளினிக்குகளில் ஒன்றில் பரிசோதனைக்கான சந்திப்பை நீங்கள் பதிவு செய்யலாம்.

எச்.ஐ.வி சுய பரிசோதனை கருவியைப் பெற, 0716379192 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும்.

 

இலங்கையில் தற்போது மூன்று வகையான எச்.ஐ.வி பரிசோதனை சோதனைகள் உள்ளன.

  1. எச்.ஐ.வி எலிசா சோதனை (விண்டோ காலம் 21-45 நாட்கள்)
  2. எச்.ஐ.வி விரைவான சோதனை (விண்டோ காலம் 42-90 நாட்கள்)
  3. எச்.ஐ.வி வாய்வழி திரவ சோதனை (விண்டோ காலம் 90 நாட்கள்)

விண்டோ காலம் என்பது எச்.ஐ.வி வைரஸை அல்லது ஆன்டிஜென்களை உருவாக்கி,பரிசோதனை மூலம் கண்டறிய எடுக்கும் நேரம். இந்த சோதனை நேர்மறையான முடிவை அளித்தால், அதை உறுதிப்படுத்த மற்றொரு சோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்கிறது.

 

நினைவில் கொள்ளுங்கள் – உங்களுக்கு எச்.ஐ.வி இருக்கிறதா என்பதை அறிய எச்.ஐ.வி பரிசோதனை மட்டுமே ஒரே வழி. ஆரம்பகாலத்தில் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பெறல் என்பது எச்.ஐ.வி உடன் சாதாரண வாழ்க்கையை வாழ உதவும்.

 

எச்.ஐ.வி பரிசோதனை பற்றிய கூடுதல் தகவல்கள் தேசிய எச்.ஐ.வி தடுப்பு திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

Social Share: