திருநங்கைகளைப் பாதிக்கும் பல பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார நிலைமைகள் உள்ளன. மருத்துவமனைகளுக்குச் சென்று மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகள், டெஸ்டிகுலர் புற்றுநோய் போன்றவற்றுக்கு பரிசோதனை செய்து கொள்வது முக்கியம்.
உலகம் முழுவதும் திருநங்கைகள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினை சுகாதார சேவைகளில் பாகுபாடு. திருநங்கைகள் ஆண் அல்லது பெண் என தெளிவாக அடையாளம் காண முடியாத உடல்களைக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பல திருநங்கைகள் ஓரங்கட்டப்படுவார்கள் என்ற பயத்தின் காரணமாக பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளைப் பெற தயங்குகிறார்கள்.
இலங்கை அரசாங்க சுகாதார சேவை அத்தகைய பாகுபாடு இல்லாமல் சேவைகளை வழங்க வலுவான முயற்சியை மேற்கொண்டு வருகிறது, மேலும் நீங்கள் ஒரு திருநங்கையாக இருந்தால், உங்களுக்குத் தேவையான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளைப் பெற தயங்க வேண்டாம்.
புற்றுநோய் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகள் போன்ற நம் அனைவரையும் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, இதில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் அடங்கும், அவை மாற்றச் செயல்பாட்டின் போது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.