மாதவிடாய் காலத்தில் இறைச்சி மற்றும் மீன் உட்கொள்வது சரியா?

ஆம்

மாதவிடாய் காலத்தில் இறைச்சி மற்றும் மீன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இலங்கையில் இறைச்சி, மீன் மற்றும் முட்டையையில் இருக்கும் மாமிச வாசனைக்கு தீய சக்த்திகள் ஈர்க்கிறது என்ற ஒரு கட்டுக்கதை உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

தரம் 7 ஆம் வகுப்பு சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடப்புத்தகத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

நமது இரத்தத்தில் இரும்புச்சத்து உள்ளது, இது உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்து ஆகும். மாதவிடாயின் போது இரத்தம் இழக்கப்படுவதால், இழந்த இரும்பை நிரப்ப உடலுக்கு இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகள் தேவை. எனவே, மாதவிடாய் காரணமாக சத்தான உணவுகளை சாப்பிடுவதை ஏன் நிறுத்த வேண்டும்?

விழிப்புணர்வு மூலம் இதுபோன்ற கட்டுக்கதைகளை நாம் அகற்றலாம். இப்பாகமுவ பதலகொட ஏரி பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் 4 வருட விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குப் பிறகு, பலர் இப்போது இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

ஒரு பெண்னின் கூற்று: தனது முதல் மாதவிடாய்க்குப் பிறகு தனது மகள் அறையில் இருந்தபோது தனது மகளுக்கு ரகசியமாக ஒரு மீன் துண்டு கொடுத்ததாகக் கூறினார். மற்றொரு பெண் மற்றவர்களுக்கு குறைவாகக் கொடுத்ததாகவும், தனது மகளுக்கு ரகசியமாக ஒரு இறைச்சித் துண்டைக் கொடுத்ததாகவும் கூறினார்.

Social Share: