
பல வருடங்களாக சுழற்ச்சி முறையில் நடைபெற்ற மாதவிடாயானது ஒரு வயதிற்கு மேல் நின்றுவிடும் அக்காலபகுதி மாதவிடாய் நிறுத்தம் என அழைக்கபடுகின்றது.
பெரும்பாலான பெண்கள் 50 வயதில் மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கிறார்கள். மற்றவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படலாம்.
மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கு ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். இந்தக் காலகட்டம் முன்மாதவிடாய் நிறுத்தம் என்று அழைக்கப்படுகிறது.
மாதவிடாய் என்பது ஒரு வருடம் முழுவதும் மாதவிடாய் ஏற்படாமல் இருப்பதாகும்.

மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகள்.
சில சந்தரப்பங்களில் ஏற்படும் வெப்பத் தாக்குதல்கள், வியர்வை, விரைவான இதயத் துடிப்பு
மாதவிடாய் மாற்றங்கள் (அதிகமான அல்லது குறைவான இரத்தப்போக்கு, ஒழுங்கற்ற இரத்தப்போக்கு)
உடம்பு மற்றும் மூட்டு வலி
மன குழப்பம், விரைவில் குழப்பம் அடைதல், மனச்சோர்வு, காரணமின்றி சோகமாக உணருதல்,

தூங்குவதில் சிரமம்
பாலியல் உறவில் அக்கறையின்மை மற்றும் அசௌகரியம்
இவை தவிர, மாதவிடாயின் போது அரிப்பு, சிறுநீர் அடங்காமை, அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகள் ஏற்படலாம்.
இவை அனைத்தும் சிகிச்சைப்பெற்றுக்கொள்ளலாம்.உங்கள் அருகிலுள்ள MOH கிளினிக்கிலிருந்து ஆலோசனை பெறவும்.
ஸ்ரீ லங்கா ஆர்த்தவஹரண சங்கம் மூலம் “ආර්තවහරණය සහ මිහිරි මැදිවිය” பிரகடனப்படுத்தப்பட்டது. இதில் சில பாகங்கள் கீழே தரப்பட்டுள்ளது.